ஜோகூர் பாரு, ஆகஸ்ட். 10-
சுகாதார அமைச்சு அங்கீகரிக்காத போலியான மருத்துவப் பொருட்களையும் சேவைகளையும் உள்ளடக்கிய 2,033 விளம்பரங்களை மலேசியத் தொடர்பு - பல்லூடக ஆணையம் எம்சிஎம்சி நீக்கியுள்ளது. இந்த அதிரடி நடவடிக்கை, இந்த ஆண்டின் ஜனவரி மாதம் முதல் ஆகஸ்ட் 1ஆம் தேதி வரை பெறப்பட்ட 2,283 புகார்களின் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளது.
போலியான மருந்துகள் குறித்து பொதுமக்கள் புகார் அளித்தால், அதனைச் சுகாதார அமைச்சுக்கு அனுப்பி, உறுதிச் செய்த பின்னரே நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தொடர்புத் துணை அமைச்சர் தியோ நீ சிங் தெரிவித்துள்ளார். சமூக வலைத்தளங்களில் பரவும் இத்தகைய விளம்பரங்களை நீக்கும் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.








