குளுவாங், நவம்பர்.22-
ஜோகூர் பாருவிற்கும், கோலாலம்பூருக்கும் இடையிலான மின்சார ரயில் சேவையான ETS, வரும் டிசம்பர் 12 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாகத் தொடங்குகிறது.
பொதுமக்களுக்கு ETS ரயில் சேவை திறந்து விடப்படுவதற்கு ஒரு நாளுக்கு முன்னதாக அதாவது டிசம்பர் 11 ஆம் தேதி, இந்த மின்சார ரயில் சேவையை மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் தொடக்கி வைப்பார் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.
ETS ரயில் சேவை, முதலில் ஜோகூர் பாருவிலிருந்து கோலாலம்பூருக்கு இணைக்கப்படும். பின்னர் அந்தச் சேவை வடக்கே பாடாங் பெசார் மற்றம் பட்டர்வொர்த்துடன் இணைக்கப்படும் என்று அந்தோணி லோக் குறிப்பிட்டார்.
இன்று குளுவாங், மாக்கோத்தா ரயில் பூங்காவில் குளுவாங் ரயில் விழாவைத் தொடக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் அந்தோணி லோக் இதனைத் தெரிவித்தார்.








