Jan 19, 2026
Thisaigal NewsYouTube
பெற்றோர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்
தற்போதைய செய்திகள்

பெற்றோர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்

Share:

பட்டாசுகளைக் கொளுத்தி விளையாடும் சிறார்கள் சம்பந்தப்பட்ட விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் ஆபத்து மிகுந்த இச்செயல்களில் ஈடுபடுவதற்குப் பிள்ளைகளை அனுமதிக்கும் அல்லது அவர்களைக் கவனிக்காமல் அலட்சியமாக இருக்கும் பெற்றோர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என்று மகளிர் , குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டுத் துறை துணை அமைச்சர் ஐமான் அதிராஹ் சபு தெரிவித்துள்ளார்.

சிறார்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் பட்டாசு வெடிகளைப் பயன்படுத்த பெற்றோர்கள் ஒரு போதும் அனுமதிக்கக்கூடாது என்பதுடன் ஆபத்து குறைவான வாணவேடிகளைச் சிறார்கள் கையாளும் போது பெற்றோர்கள் அணுக்கமாக கண்காணிக்க வேண்டும் என்று துணை அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
பட்டாசுப் பொருட்களின் விற்பனைக்கு அரசாங்கம் அனுமதி வழங்கியிருந்தாலும், சிறுவர்களைக் கண்காணிப்பது பெற்றோர்களின் கடமையாகும் என்று ஐமான் அதிராஹ் சபு நினைவுறுத்தினார்.

Related News