Sep 27, 2026
Thisaigal NewsYouTube
பேருந்து ஓட்டும் போது மடியில் பெண்: ஓட்டுநர் போலீசில் வாக்குமூலம்
தற்போதைய செய்திகள்

பேருந்து ஓட்டும் போது மடியில் பெண்: ஓட்டுநர் போலீசில் வாக்குமூலம்

Share:

ஜோகூர், கூலாய் நோக்கிச் சென்ற சொகுசுப் பேருந்தை, பெண் ஒருவரை மடியில் அமர வைத்து ஓட்டிய விவகாரம் தொடர்பாக 36 வயது ஓட்டுநர் மலாக்கா, ஜாசின் மாவட்ட போலீஸ் நிலையத்தில் இன்று ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.

கடந்த ஏப்ரல் 13-ம் தேதி சமூக ஊடகங்களில் வைரலான காணொளியில், ஓட்டுநரின் மடியில் இருந்த பெண் பேருந்தை இயக்குவதும், வாகனம் சாலையில் அலைமோதியதும் பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து 'ஸ்ரீ மாஜு' நிறுவனத்தைச் சேர்ந்த அந்த ஓட்டுநர் பணிநீக்கம் செய்யப்பட்டார். தற்போது போலீசார் இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த ஜாசின் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்பிரிண்டெண்டன் லீ ராபர்ட், சம்பந்தப்பட்ட ஓட்டுநரும் அந்தப் பெண்ணும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருவதாகத் தெரிவித்தார்.

பொதுப் போக்குவரத்து வாகனங்களில் இத்தகைய பொறுப்பற்ற செயல்கள் பயணிகளின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் என்பதால், சாலைப் போக்குவரத்து இலாகாவான JPJ, பேருந்து ஓட்டுநரின் உரிமத்தை ரத்து செய்வது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளை எடுக்கப் பரிசீலித்து வருகிறது.

Related News

சபாவில் நிலநடுக்கத்தைக் கண்காணிக்க 28 நில அதிர்வு நிலையங்கள் - மெட்மலேசியா அறிவிப்பு

சபாவில் நிலநடுக்கத்தைக் கண்காணிக்க 28 நில அதிர்வு நிலையங்கள் - மெட்மலேசியா அறிவிப்பு

நஜிப்புக்கு ஆதரவாக இதுவரை 9.25 மில்லியன் ரிங்கிட் திரட்டப்பட்டுள்ளது - ஸாஹிட் ஹாமிடி தகவல்

நஜிப்புக்கு ஆதரவாக இதுவரை 9.25 மில்லியன் ரிங்கிட் திரட்டப்பட்டுள்ளது - ஸாஹிட் ஹாமிடி தகவல்

கோலாலம்பூர் கேளிக்கை மையத்தில் அதிரடிச் சோதனை: ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான நடன நிகழ்ச்சிகளை நடத்திய 4 பேர் கைது

கோலாலம்பூர் கேளிக்கை மையத்தில் அதிரடிச் சோதனை: ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான நடன நிகழ்ச்சிகளை நடத்திய 4 பேர் கைது

நேபாள வெள்ளத்தில் மாயமான 55 மலேசியர்களின் கதி என்ன? - வெளியுறவு அமைச்சிடம் குடும்பத்தினர் முறையீடு

நேபாள வெள்ளத்தில் மாயமான 55 மலேசியர்களின் கதி என்ன? - வெளியுறவு அமைச்சிடம் குடும்பத்தினர் முறையீடு

கலும்பாங்–கோலா குபு பாரு சிக்னல் கோளாறு: கேடிஎம் சேவைகளில் தாமதம்

கலும்பாங்–கோலா குபு பாரு சிக்னல் கோளாறு: கேடிஎம் சேவைகளில் தாமதம்

யுஐடிஎம் ஹோல்டிங்ஸ்: முதலில் விசாரணை, பின்னர் நடவடிக்கை – அன்வார்

யுஐடிஎம் ஹோல்டிங்ஸ்: முதலில் விசாரணை, பின்னர் நடவடிக்கை – அன்வார்