Jul 1, 2026
Thisaigal NewsYouTube
மலேசியா நெருக்கடியில் உள்ளது' - விலை உயர்வு குறித்து பிரதமர் அன்வார் எச்சரிக்கை
தற்போதைய செய்திகள்

மலேசியா நெருக்கடியில் உள்ளது' - விலை உயர்வு குறித்து பிரதமர் அன்வார் எச்சரிக்கை

Share:

ஈரான் போர் காரணமாக ஏற்பட்டுள்ள உலகளாவிய எண்ணெய் நெருக்கடியால், மலேசியாவில் விரைவில் விலை உயர்வு ஏற்படும் என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் எச்சரித்துள்ளார்.

இன்று காலை போக்குவரத்து அமைச்சின் மாதாந்திர கூட்டத்தில் உரையாற்றிய அவர், இந்தச் சூழலை எதிர்கொள்ள மக்கள் தயாராக இருக்குமாறு கேட்டுக்கொண்டார்.

பெட்ரோலியம் சார்ந்த பொருட்களின் விலை உயர்வுக்குப் பல காரணங்கள் இருப்பதாகக் குறிப்பிட்ட பிரதமர், மலேசியக் கப்பல்கள் பாதுகாப்பாகச் சென்றாலும், காப்புறுதி பிரீமியம் மற்றும் கப்பல் போக்குவரத்து கட்டணங்கள் அதிகரித்துள்ளதாக பிரதமர் கூறினார்.

இதனால் ஜோகூர், பெங்கெராங் சுத்திகரிப்பு நிலையத்திற்கு வரும் எண்ணெயைச் சுத்திகரிப்பதற்கான செலவும் உயர்ந்துள்ளது.

குறிப்பாக, இறக்குமதி செய்யப்படும் உரங்களின் விலை கணிசமாக உயரும் என்பதால், விவசாயத் துறையிலும் பாதிப்புகள் ஏற்படும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

"பிரச்சினைகள் வந்த பிறகு அதிர்ச்சியடையாமல், முன்கூட்டியே இதனைப் புரிந்துகொண்டு நாம் புத்திசாலித்தனமாகச் செயல்பட வேண்டும்" என்று டத்தோஸ்ரீ அன்வார் அரசு ஊழியர்களுக்கு அறிவுறுத்தினார்.

Related News