ஜோகூர் பாருவில் எல் அர் டி சேவை குறித்து எதிர்வரும் வியாழக்கிழமை சந்திப்புக் கூட்டத்தை நடத்த உள்ளது ஜோகூர் மாநில அரசு.
அந்த சந்திப்புக் கூட்டத்திற்குப் பிறகு, மத்திய அரசிடம் முன்மொழிவுத் திட்ட வரைவை சமர்ப்பிக்கும் என பொதுப் பணி, போக்குவரத்து, அடிப்படை வசதிக்கான ஆட்சிக்குழு உறுப்பினரான முகமது ஃபாஸ்லி முகமது சலே குறிப்பிட்டார்.
ஸ்கூடாய், தெப்ராவ், இஸ்கண்டார் புத்ரி ஆகிய ஊர்களைத் தொடர்புப் படுத்திய 30 கிலோ மீட்டர் தூரம் வரையில் நிர்மாணிக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது.








