பக்காத்தான் ஹராப்பானுடன் இணைந்து பாரிசான் நேஷனல், ஒற்றுமை அரசாங்கத்தை அமைத்து இருப்பது மூலம் அந்த கூட்டணி, தற்போது ஊழல் கூட்டணியாக மாறியுள்ளது என்று டிஏபி முன்னாள் விளம்பரப்பிரிவு தலைவர் டோனி புவா கூறியிருப்பது மூலம் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
டிஏபி யின் பொதுச் செயலாளர் அந்தோணி லோக்கின் கொள்கை ஆலோசகரான இருக்கும் டோனி புவாவின் இந்த செயலை அந்தோணி லோக் வெறுமனே பார்த்துக் கொண்டு இருக்க முடியாது என்று மசீச உதவித் தலைவர் டத்தோ ஶ்ரீ தி லியான் கேர் வலியுறுத்தியுள்ளார்.
மாமன்னரின் அழைப்பை ஏற்று அமைக்கப்பட்டுள்ள ஒற்றுமை அரசாங்கத்தில் இணைந்துள்ள இரு கூட்டணிகளை ஊழல் கூட்டணி என்று வர்ணித்து இருக்கும் டோனி புவா, டிஏபி யிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்று தி லியான் கேர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related News

ஆல்பெர்ட் தே கைது நடவடிக்கை மீதான காணொளியை வெளியிடுவீர்

ஒழுங்கீன நடவடிக்கைகள்: நடப்பு சட்டம் ஆராயப்படும்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரணம் ஒரு கொலையே

அம்பாங்கில் கும்பல் தாக்குதலில் மூவர் காயம்

பிரதமர் தலைமையில் ஏழாவது தேசிய நீர் மன்றக் கூட்டம்


