நேற்று பினாங்கு பாலத்தின் டோல் சாவடிக்கு நுழையும் வாயிலில் அல்சா கார் ஒன்று திடீரென தீப்பற்றி முற்றாக அழிந்தது.
நேற்று மாலை 2.30 மணியளவில் நடந்த இச்சம்பவத்தின் போது, கார் திடீரென தீப்பற்றிக் கொண்டதை சுதாகரித்துக் கொண்டதால் அதன் ஓட்டுனர் காரைவிட்டு வெளியேறி எந்தக் காயங்களுமின்றி உயிர் தப்பினார் எனா பெராய் வட்டார தீயணைப்பு நிலையத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.
காரில் பற்றிய தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்குத் தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் எடுத்துக் கொண்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.








