நாட்டில் இன்னும் திருமணம் ஆகாமல் முதிர் கன்னிகளாக இருந்து வரும் பெண்களின் பிரச்னையை தீர்ப்பதற்கு முஸ்லிம் ஆண்கள், ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று பாஸ் கட்சித் துணைத் தலைவர் இன்று பரிந்துரை செய்துள்ளார்.
இதனால் வயது கடந்த நிலையில், திருமணமாகமலேயே இருக்கும் முஸ்லிம் பெண்கள், இல்லற வாழ்வில் ஈடுபடுவதற்கு ஒரு வாய்ப்பாக அமையும் என்று பாஸ் கட்சியின் துணைத் தலைவரும், குபாங் கெரியான் நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ ஶ்ரீ துவான் இப்ராஹிம் துவான் மான் தெரிவித்தார்.
நாட்டில் பலர், இன்னும் பல தாரங்கள் கொண்ட திருமணத்தை ஒரு முக்கிய பிரச்னையாக கருதுகின்றனர். திருமணம் ஆகாத வயது கடந்த பெண்களுக்கு வாழ்வு அளிக்கமல் இருப்பது ஓர் குற்ற உணர்வு போல் மேலிடுகிறது.
ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை திருமணம் செய்து கொள்வதற்கு பல ஆ ண்களுக்கு தகுதியும், ஆற்றலும் உள்ளது. எனவே இது போன்ற திருமணகளுக்கு அரசாங்கம் தனது தார்மீக ஆதவை வழங்க வேண்டும் என்று துவான் இப்ராஹிம், இன்று நாடாளுமன்றத்தை கேட்டுக்கொண்டார்.








