Oct 14, 2026
Thisaigal NewsYouTube

பினாங்கு பாலத்திலிருந்து குதித்த ஆடவரின் சடலம் மீட்பு

திசைகள் செய்திப்பிரிவு
Share:

பெட்டாலிங் ஜெயா, பிப்.19-

நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 2.25 மணியளவில் பினாங்கு பாலத்திலிருந்து கடலில் குதித்ததாக நம்பப்படும் ஆடவரின் சடலம், தீவிர தேடலுக்கு பின்னர் இன்று காலை 9 மணியளவில் கண்டு பிடிக்கப்பட்டது.

பினாங்கு பாலத்தில் 5.5 ஆவது கிலோ மீட்டரில் வாகன நிறுத்தும் இடத்திலிருந்து கடலில் குதித்ததாக நம்பப்படும் அந்த ஆடவரின் சடலம், கடலோரப்பகுதியில் மீட்புப்படையினரால் கண்டு பிடிக்கப்பட்டதாக ஜார்ஸ்டவுன் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அப்துல் ரசாக் முகமட் தெரிவித்தார்.

பினாங்கு மருத்துவமனை சவக்கிடங்கிற்கு கொண்டுச் செல்லப்பட்ட அந்த ஆடவரின் சடலத்தை குடும்ப உறுப்பினர்கள் அடையாளம் கண்டதாக அவர் குறிப்பிட்டார்.

அதிகாலை நேரத்தில் பினாங்கு பாலத்திலிருந்து ஒருவர் கடலில் குதித்ததாக பொது மக்களிடமிருந்து கிடைக்கப் பெற்ற தகவலைத் தொடர்ந்து பாயான் லெப்பாஸைச் சேர்ந்த 48 வயதுடைய அந்த ஆடவரைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டதாக ஏசிபி அப்துல் ரசாக் தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
தமிழ்ப்பள்ளி மாணவர்கள் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கூடுதல் கல்விப் பயிற்சி! – துணைக் கல்வி அமைச்சர்

தமிழ்ப்பள்ளி மாணவர்கள் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கூடுதல் கல்விப் பயிற்சி! – துணைக் கல்வி அமைச்சர்

ஊழல் செய்பவர்கள்தான் பதவி விலக வேண்டும்; நல்ல தலைவர்களைப் பாதுகாக்க வேண்டும்!’ – அந்தோணி லோக்கிற்கு அன்வார் பகிரங்க ஆதரவு

ஊழல் செய்பவர்கள்தான் பதவி விலக வேண்டும்; நல்ல தலைவர்களைப் பாதுகாக்க வேண்டும்!’ – அந்தோணி லோக்கிற்கு அன்வார் பகிரங்க ஆதரவு

தீபாவளிக்கு முன்பாக 50,000க்கும் மேற்பட்ட ஓட்டுநர்களுக்கு ரிங்கிட் 1,000 உதவி! அந்தோணி லோக் உறுதி

தீபாவளிக்கு முன்பாக 50,000க்கும் மேற்பட்ட ஓட்டுநர்களுக்கு ரிங்கிட் 1,000 உதவி! அந்தோணி லோக் உறுதி

8,690 மாணவர்களின் தமிழ்மொழித் திறனை மேம்படுத்த மித்ரா 9 லட்சம் ரிங்கிட்டுக்கு மேல் நிதி ஒதுக்கீடு

8,690 மாணவர்களின் தமிழ்மொழித் திறனை மேம்படுத்த மித்ரா 9 லட்சம் ரிங்கிட்டுக்கு மேல் நிதி ஒதுக்கீடு

1எம்டிபி வழக்கில் நஜிப்புக்கு மீண்டும் பின்னடைவு! 15 ஆண்டு சிறைத் தண்டனையை நிறுத்திவைக்க நீதிமன்றம் மறுப்பு

1எம்டிபி வழக்கில் நஜிப்புக்கு மீண்டும் பின்னடைவு! 15 ஆண்டு சிறைத் தண்டனையை நிறுத்திவைக்க நீதிமன்றம் மறுப்பு

கல்வியில் பின்தங்கிய தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கத் தொழில்திறன் பயிற்சி! பேராக் அரசு ஆதரவு – டத்தோ சிவநேசன்

கல்வியில் பின்தங்கிய தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கத் தொழில்திறன் பயிற்சி! பேராக் அரசு ஆதரவு – டத்தோ சிவநேசன்