Sep 23, 2026
Thisaigal NewsYouTube
யானை அமோய் வைரல் வீடியோ: மன அழுத்தமோ, பசியோ அல்ல; ஜப்பான் மிருகக்காட்சிசாலை விளக்கம்
தற்போதைய செய்திகள்

யானை அமோய் வைரல் வீடியோ: மன அழுத்தமோ, பசியோ அல்ல; ஜப்பான் மிருகக்காட்சிசாலை விளக்கம்

Share:

ஜப்பான், ஒசாகாவில் உள்ள தென்னோஜி மிருகக்காட்சிசாலையில், மலேசியாவிலிருந்து கொண்டு செல்லப்பட்ட 'அமோய்' (Amoi) என்ற ஆசிய யானை வைக்கோல் வலையைக் கடிக்கும் வைரல் வீடியோ, அதன் மன அழுத்தம் அல்லது பசியின் அடையாளம் அல்ல என்று தைப்பிங் நகராண்மைக்கழகத்தின் தலைவர் முஹமட் அக்மால் டஹலான் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், காடுகளில் யானைகள் இயற்கையாக உணவு தேடும் முறையைத் தூண்டுவதற்காக உலகளவில் பயன்படுத்தப்படும் ஒரு தற்காப்பு வழிமுறைதான் இந்த வைக்கோல் வலைகள் என்று விளக்கினார். இது யானைகளின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தி, அவற்றின் சலிப்பைக் குறைக்கும் என அவர் கூறினார்.

மலேசியாவின் தாரா, அமோய் மற்றும் கெலாட் ஆகிய மூன்று யானைகளும் நல்ல ஆரோக்கியத்துடனும், தீவிர கண்காணிப்பிலும் உள்ளன. ஜப்பானின் தற்போதைய கடுமையான கோடைகால வெப்பத்தைத் தாங்கும் வகையில் அவற்றுக்குக் குளியல் குளங்கள், நிழல் குடில்கள் மற்றும் சேற்று சகதிகள் போன்ற சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. எனவே, முழுமையான பின்னணியை அறியாமல் குறுகிய வீடியோக்களை மட்டும் பார்த்து பொதுமக்கள் தவறான முடிவுகளை எடுக்க வேண்டாம் என முஹமட் அக்மால் டஹலான் கேட்டுக் கொண்டார்.

Related News

மோண்ட் கியாரா போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு - 40 மீட்டர் சாலை திறப்பு!

மோண்ட் கியாரா போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு - 40 மீட்டர் சாலை திறப்பு!

நாடெங்கிலும் 25.77 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான கடத்தல் சிகரெட், மதுபானங்கள் பறிமுதல்!

நாடெங்கிலும் 25.77 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான கடத்தல் சிகரெட், மதுபானங்கள் பறிமுதல்!

80 ஆயிரம் ரிங்கிட் செலவில் 40 மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி -  டத்தோ ஸ்ரீ சுந்தராஜு சோமு தகவல்

80 ஆயிரம் ரிங்கிட் செலவில் 40 மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி - டத்தோ ஸ்ரீ சுந்தராஜு சோமு தகவல்

போக்குவரத்து துறையில் மலேசியா – சீனா புதிய ஒப்பந்தம்: செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த திட்டம்

போக்குவரத்து துறையில் மலேசியா – சீனா புதிய ஒப்பந்தம்: செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த திட்டம்

அரசு உதவி கிடைத்தால் ஏற்கத் தயார் - ஏர்ஆசியா நிதி நெருக்கடி குறித்து டோனி ஃபெர்னாண்டஸ் விளக்கம்

அரசு உதவி கிடைத்தால் ஏற்கத் தயார் - ஏர்ஆசியா நிதி நெருக்கடி குறித்து டோனி ஃபெர்னாண்டஸ் விளக்கம்

55 மலேசியர்களின் குடும்பங்களை பிரதமர் நேரில் சந்திக்க வேண்டும்

55 மலேசியர்களின் குடும்பங்களை பிரதமர் நேரில் சந்திக்க வேண்டும்