Sep 23, 2026
Thisaigal NewsYouTube
இஸ்ரேலுக்குச் செல்லவிருந்த கன்டெய்னர் பறிமுதல்: தஞ்சோங் பெலப்பாஸ் துறைமுகத்தில் அதிரடி நடவடிக்கை
தற்போதைய செய்திகள்

இஸ்ரேலுக்குச் செல்லவிருந்த கன்டெய்னர் பறிமுதல்: தஞ்சோங் பெலப்பாஸ் துறைமுகத்தில் அதிரடி நடவடிக்கை

Share:

இஸ்ரேலுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாகச் சந்தேகிக்கப்படும் பொருட்கள் அடங்கிய கன்டெய்னர் ஒன்றை, ஜோகூர், தஞ்சோங் பெலப்பாஸ் துறைமுகத்தில் மலேசிய எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு முகமையான எம்சிபிஏ நேற்று அதிரடியாகப் பறிமுதல் செய்துள்ளது.

ரகசியத் தகவலின் பேரில் நடத்தப்பட்ட இந்தச் சோதனையின் பூர்வாங்க விசாரணையில், இஸ்ரேலுக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பொருட்களை ஏற்றுமதி செய்யத் தடை விதிக்கும் '2023 சுங்கத் தடையாணைச் சட்டத்தின்' கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக எம்சிபிஏ தெரிவித்துள்ளது.

"மலேசியாவின் கொள்கைகள் மற்றும் சட்டங்களுக்கு முரணாக இஸ்ரேலுக்குப் பொருட்களை அனுப்ப முயலும் எந்தவொரு முயற்சியும் சகித்துக் கொள்ளப்படாது. பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள், '2010 ஆம் ஆண்டு வியூக வர்த்தகச் சட்டத்தின்' கீழ் கட்டுப்பாட்டிற்குரிய பொருட்களா என்பது குறித்து மற்ற முகமைகளுடன் இணைந்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சட்டத்தை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்," என்று அதன் அதிகாரப்பூர்வ அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Related News

மோண்ட் கியாரா போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு - 40 மீட்டர் சாலை திறப்பு!

மோண்ட் கியாரா போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு - 40 மீட்டர் சாலை திறப்பு!

நாடெங்கிலும் 25.77 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான கடத்தல் சிகரெட், மதுபானங்கள் பறிமுதல்!

நாடெங்கிலும் 25.77 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான கடத்தல் சிகரெட், மதுபானங்கள் பறிமுதல்!

80 ஆயிரம் ரிங்கிட் செலவில் 40 மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி -  டத்தோ ஸ்ரீ சுந்தராஜு சோமு தகவல்

80 ஆயிரம் ரிங்கிட் செலவில் 40 மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி - டத்தோ ஸ்ரீ சுந்தராஜு சோமு தகவல்

போக்குவரத்து துறையில் மலேசியா – சீனா புதிய ஒப்பந்தம்: செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த திட்டம்

போக்குவரத்து துறையில் மலேசியா – சீனா புதிய ஒப்பந்தம்: செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த திட்டம்

அரசு உதவி கிடைத்தால் ஏற்கத் தயார் - ஏர்ஆசியா நிதி நெருக்கடி குறித்து டோனி ஃபெர்னாண்டஸ் விளக்கம்

அரசு உதவி கிடைத்தால் ஏற்கத் தயார் - ஏர்ஆசியா நிதி நெருக்கடி குறித்து டோனி ஃபெர்னாண்டஸ் விளக்கம்

55 மலேசியர்களின் குடும்பங்களை பிரதமர் நேரில் சந்திக்க வேண்டும்

55 மலேசியர்களின் குடும்பங்களை பிரதமர் நேரில் சந்திக்க வேண்டும்