Oct 18, 2026
Thisaigal NewsYouTube

பாதாளக்குழிக்குள் விழுந்து மாது மரணம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பாதாளக்குழிக்குள் விழுந்து மாது மரணம்

பெட்டாலிங் ஜெயா,செப்டம்பர் 17-

பினாங்கு,புக்கிட் மெர்தாஜாம் - மில் மலையேறும் நடவடிக்கையில் ஈடுபட்ட 50 வயது மாது ஒருவர் 2 மீட்டர் ஆழத்தைக் கொண்ட பாதாளக்குழிக்குள் விழுந்து மரணமுற்றார்.

இச்சம்பவம் இன்று பிற்பகல் ஒரு மணியளவில் அந்த மலைப்பகுதியில் ஜாலன் கோலம் செரோக் டோக் குன் என்ற இடத்தில் நிகழ்ந்தது. ஓ ஐ சின் என்று அடையாளம் கூறப்பட்ட அந்த மாது சம்பவ இடத்திலேயே மாண்டதாக தீயணைப்பு, மீட்புப்படை அதிகாரி அஸ்மி ஜகாரியா தெரிவித்தார்..

அறுவர் கொண்ட மீட்புக்குழுவினர், அந்த மாதுவின் சடலத்தை மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்ததாக அவர் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →