Oct 13, 2026
Thisaigal NewsYouTube

ஆடம்பரக் கைப்பையைத் திருடியதாக புக்கிட் ஜாலில் போலீஸ் நிலையத் தலைவர் மீது குற்றச்சாட்டு

திசைகள் செய்திப்பிரிவு
Share:

கோலாலம்பூர், மார்ச்.07-

கடந்த மாதம், மாது ஒருவருக்குச் சொந்தமான 3 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள கைப்பையைத் திருடியதாக கோலாலம்பூர், புக்கிட் ஜாலில் போலீஸ் நிலையத் தலைவர் இன்ஸ்பெக்டர் அஸ்லான் சூடினுக்கு எதிராக கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டது.

45 வயதான இன்ஸ்பெக்டர் அஸ்லான் சூடின், மாஜிஸ்திரேட் பாஃரா நபிஹா முகமட் டான் முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

கடந்த பிப்ரவரி 21 ஆம் தேதி மாலை 5.45 மணியளவில் புக்கிட் ஜாலிலில் உள்ள ஒரு ஆடம்பர அடுக்குமாடி வீட்டில் 35 வயது பெண்மணிக்கு சொந்தமான ப்ராடா பிராண்டட் வகையைச் சேர்ந்த கைப்பையைத் திருடியதாக அந்த போலீஸ் நிலைய தலைவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

அந்த உயர் போலீஸ அதிகாரி, இன்னும் பிடிபடாமல் இருக்கும் மேலும் ஒரு நபருடன் கூட்டாக சேர்ந்து விலை உயர்ந்த கருப்பு நிறக் கைப்பையைத் திருடிதாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

குற்றவாளி என்ற நிருபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 10 ஆண்டு சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 380 ஆவது பிரிவின் கீழ் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

எனினும் தனக்கு எதிரான குற்றச்சாட்டை இஸ்ஸ்பெக்டர் அஸ்லான் சூடின், மறுத்து விசாரணை கோரியதால் அவரை ஒரு நபர் உத்தரவாதத்துடன் மூவாயிரம் ரிங்கிட் ஜாமீனில் விடுவிக்க மாஜிஸ்திரேட் பாஃரா அனுமதித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
கேஎல்ஐஏ பாதுகாப்பைக் கடந்து போதைப்பொருள் கடத்தலா? ஜப்பானில் 5 மலேசியர்கள் கைது: விளக்கம் கோரப்படும்- டத்தோ ஶ்ரீ சைஃபுடின்

கேஎல்ஐஏ பாதுகாப்பைக் கடந்து போதைப்பொருள் கடத்தலா? ஜப்பானில் 5 மலேசியர்கள் கைது: விளக்கம் கோரப்படும்- டத்தோ ஶ்ரீ சைஃபுடின்

மிரி–சுபாங் நேரடி விமானச் சேவை டிசம்பர் 1 முதல்! பயண நேரம் குறையும்; பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கம்

மிரி–சுபாங் நேரடி விமானச் சேவை டிசம்பர் 1 முதல்! பயண நேரம் குறையும்; பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கம்

எஸ்பிஆர்எம் உயர் அதிகாரி 3 லட்சத்து 50 ஆயிரம் ரிங்கிட் பெற்றதாகப் புகார்! போலீஸ் இரு கோணங்களில் விசாரணை

எஸ்பிஆர்எம் உயர் அதிகாரி 3 லட்சத்து 50 ஆயிரம் ரிங்கிட் பெற்றதாகப் புகார்! போலீஸ் இரு கோணங்களில் விசாரணை

முஸ்லிம் அல்லாத சமயச் சடங்கில் பங்கேற்றதாகக் கூறப்படும் முஸ்லிம் ஆடவர் கைது! மேலும் 14 பேரிடம் விசாரணை

முஸ்லிம் அல்லாத சமயச் சடங்கில் பங்கேற்றதாகக் கூறப்படும் முஸ்லிம் ஆடவர் கைது! மேலும் 14 பேரிடம் விசாரணை

ஸாஹிட் மீதான 47 குற்றச்சாட்டுகள்: பிரதமருக்கு மறுவழக்குத் தொடர உத்தரவிடும் அதிகாரம் இல்லை

ஸாஹிட் மீதான 47 குற்றச்சாட்டுகள்: பிரதமருக்கு மறுவழக்குத் தொடர உத்தரவிடும் அதிகாரம் இல்லை

பினாங்கில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும்! காற்றுத் தூய்மைக் குறியீடு 150-க்குக் கீழ்

பினாங்கில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும்! காற்றுத் தூய்மைக் குறியீடு 150-க்குக் கீழ்