கோத்தா கினபாலு, ஆகஸ்ட்.07-
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம்மின் சபா மாநிலத்தின் புதிய ஆணையராக டத்தோ முகமட் ஃபுவாட் பஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார். அவரின் பதவிக் காலம் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல் அமலாக்கத்திற்கு வருகிறது.
சபா மாநிலத்தின் எஸ்பிஆர்எம் ஆணையராக டத்தோ முகமட் ஃபுவாட் பஸ்ரா நியமிக்கப்பட்டு இருப்பது மூலம் சபாவைச் சேர்ந்த ஒருவர் அந்த ஆணையத்திற்குத் தலைமையேற்று இருப்பது இதுவே முதல் முறையாகும்.
சபா மாநில எஸ்பிஆர்எம் ஆணையராக கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதியிலிருந்து சுமார் 11 ஆண்டு காலம் பொறுப்பு வகித்து வந்த டத்தோ கருணாநிதி சுப்பையாவிற்கு பதிலாக புதிய மாநில ஆணையராக டத்தோ முகமட் ஃபுவாட் பஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.
பினாங்கு மாநில எஸ்பிஆர்எம் ஆணையரான டத்தோ முகமட் ஃபுவாட் பஸ்ரா, சபாவிற்கு மாற்றப்பட்டு இருப்பது மூலம் டத்தோ கருணாநிதி, பினாங்கு மாநில எஸ்பிஆர்எம் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பதவி பரிமாற்றச் சடங்கு இன்று நடைபெற்றது.








