கோலாலம்பூர், செப்டம்பர்.04-
அசுத்தத்தின் உறைவிடமாகக் காணப்பட்ட கோலாலம்பூர், பங்சாரில் இரண்டு உணவகங்கள் இன்று மூடப்பட்டன. பொதுமக்கள் அளித்த புகாரைத் தொடர்ந்து கோலாலம்பூர் மாநகர் மன்றத்தின் சுகாதாரப் பிரிவு பங்சார், ஜாலான் கெமுஜாவில் உள்ள 3 உணவகங்களில் திடீர் சோதனை மேற்கொண்டது. அவற்றில் ஓர் உணவகம் தூய்மையைப் பேணும் வகையில் இருந்தது. இதர இரண்டு உணவகங்கள் சுகாதாரக் கேட்டிற்கு வித்திடும் வகையில் மிக அசுத்தமாகக் காணப்பட்டன.
சமையல் அறையில் பானைகளுக்கு இடையே இடுக்களில் எலிகளின் எச்சம், பாசை பூச்சிகள், ஈக்கள் என மிக அசுத்தமாகக் காணப்பட்டதாக மாநகர் மன்றம் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.








