Oct 10, 2026
Thisaigal NewsYouTube

டான்ஸ்ரீ பழனிவேலின் நல்லடக்கச் சடங்கு வியாழக்கிழமை நடைபெறும்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
டான்ஸ்ரீ பழனிவேலின் நல்லடக்கச் சடங்கு வியாழக்கிழமை நடைபெறும்

கோலாலம்பூர், ஜூன்.17-

இன்று காலமான மஇகா முன்னாள் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ஜி. பழனிவேல் அவர்களின் நல்லடக்கச் சடங்கு வரும் ஜுன் 19 ஆம் தேதி வியாழக்கிழமை பிற்பகல் 1.30 மணி முதல் 2.45 மணி வரை எண். 3, ஜாலான் பங்குங், 59100, பங்சார், கோலாலம்பூர் என்ற முகவரில் உள்ள அவரின் இல்லத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை ஜுன் 18 ஆம் தேதி புதன்கிழமை காலை 9.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை டான்ஸ்ரீ பழனிவேலின் நல்லுடலுக்கு இறுதி மரியாதை செலுத்த பொதுமக்கள் அனுமதிக்கப்படுவர்.

வியாழக்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு கோலாலம்பூர், செந்தூல், இந்து தகன மேடையில் டான்ஸ்ரீ பழனிவேலின் நல்லுடல் தகனம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

76 வயதான டான்ஸ்ரீ பழனிவேல், இன்று காலை 8 மணியளவில் கோலாலம்பூர் பெரிய மருத்துவமனையில் தனது இறுதி மூச்சை விட்டதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →