Dec 3, 2025
Thisaigal NewsYouTube
மூடா கட்சியின் எதிர்காலம் குறித்து முடிவு செய்யப்படும்
தற்போதைய செய்திகள்

மூடா கட்சியின் எதிர்காலம் குறித்து முடிவு செய்யப்படும்

Share:

6 மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் 19 தொகுதிகளில் போட்டியிட்டு ஒரு தொகுதியில்கூட வெற்றி பெற முடியாமல் தோல்வியை தழுவிய சையிட் சாடிக் அப்துல் ரஹ்மானை தலைவராக கொண்டுள்ள மூடா கட்சியின் எதிர்காலம் குறித்து நிர்ணயிப்பதற்கு அதன் பொறுப்பாளர்கள் விரைவில் சிறப்புக்கூட்டத்தை நடத்தவிருக்கின்றனர்.

மூடா கட்சி இனி எத்தகைய இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும், அதன் நிலைப்பாடு, மற்றும் அதன் எதிர்காலம் குறித்து நிர்ணயிப்பதற்கு இந்தக் கூட்டம் நடத்தவிருப்பதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் அமீர் அப்துல் ஹாடி தெரிவித்துள்ளார்.

மூடா கட்சியின் தோல்வியைத் தொடர்ந்து அக்கட்சி, டிஏபி யுடன் இணைய வேண்டும் என்று அதன் மூத்த தலைவர் லிம் கிட் சியாங் ஆலோசனை கூறியிருந்தார்.

Related News