தந்தையும், மகனும் சென்ற மோட்டார் சைக்கிள், மரக்கட்டைகளை ஏற்றி வந்த லோரியுடன் எதிரும் புதிருமாக மோதிக் கொண்ட கோர சாலை விபத்தில் இருவரும் மாண்டனர். இச்சம்பவம் நேற்று மாலை 6.15 மணியளவில் கிளந்தான், ஜாலன் குவா முசாங் - ஜெலி சாலையின் 37 ஆவது கிலோ மீட்டரில் நிகழ்ந்தது. 55 வயது மிஹாமாட் சிகி முஹமாட் அலி மற்றும் அவரின் 15 வயது மகன் முஹமாட் ஹஸ்புல்லா ஆகியோரே இச்சம்பவத்தில் மண்டதாக அடையாளம் கூறப்பட்டது.
தலையிலும் உடலிலும் கடும் காயங்களுக்கு ஆளான தந்தையும் மகனும் சம்பவ இடத்திலேயே மாண்டதாக குவா மூடாங் மாவட்ட போலீஸ் தலைவர் சிக் சூன் ஃபு தெரிவித்தார்.

Related News

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

டிசம்பர் 30-ஆம் தேதி முதல் மாயமான எம்எச்370 விமானத்தை தேடும் பணிகள் மீண்டும் துவக்கம்


