கோலாலம்பூர், டிசம்பர்.15-
நகர்புறங்களில் சாலையோரத் தடுப்பான்கள் அமைத்திருப்பது, சாலைகளை அலங்கரிப்பதற்காக அல்ல, மாறாக அவை அவ்வழியே செல்லும் பாதசாரிகளைப் பாதுகாப்பதற்காக என கோலாலம்பூர் மாநகர் மன்றமான டிபிகேஎல் பொதுமக்களை நினைவூட்டியுள்ளது.
சாலைகளைப் பயன்படுத்துவோர், பாதசாரிகளை மதித்து, நடைபாதைகளில் வாகனங்கள் மற்றும் மோட்டார்களை நிறுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் டிபிகேஎல் வலியுறுத்தியுள்ளது.
Bollards எனப்படும் சாலைத் தடுப்பான்களானது, பொதுமக்களின் பாதுகாப்பினைக் கருத்தில் கொண்டு, இரவு மற்றும் மழை நேரங்களில் ஒளிரக்கூடிய தன்மையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் டிபிகேஎல் குறிப்பிட்டுள்ளது.
ஆகவே, சாலைத் தடுப்பான்களை மறைக்கும் வகையில், பொதுமக்கள், எந்த ஓர் இடையூறையும் செய்யக்கூடாது என்றும் எச்சரித்துள்ளது.
இதன் மூலம், கோலாலம்பூரை அனைவருக்கும் பாதுகாப்பான மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட நகரமாக மாற்றுவதற்கான தனது உறுதிப்பாட்டை டிபிகேஎல் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.








