நாடாளுமன்றத்தில் தற்போது எதிர்கட்சித் தலைவராக இருந்து வரும் bersatu கட்சியின் பொதுச் செயலாளரும், லாரூட் எம்.பி. யுமான ஹம்ஸா ஸைனுடீன், எதிர் கட்சித் தலைவர் பொறுப்பிலிருந்து மாற்றப்படலாம் என்ற ஆருடம் வலுத்துவருகிறது.
ஹம்ஸா ஸைனுடீனுக்கு பதிலாக ஆராவ் எம்.பி. ஷஹிடான் கசிம் அல்லது கெதெரே எம்.பி. கிலிர் முகமட் நூர் நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
பெரிகாத்தான் நேஷ்னல் கூட்டணியின் பொதுச் செயலாளரான ஹம்ஸா ஸைனுடீன் னால், எதிர் கட்சித் தலைவர் என்ற முறையில் நாடாளுமன்றத்தில் வலுவான தற்காப்பு அரணை அமைக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது.
இன்னிலையில், புதிய எதிர் கட்சித் தலைவரை நியமிப்பதற்கு ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படும் வேளையில், இந்த வாதத்தைப் பாஸ் கட்சியின் துணைத் தலைவர் துவான் இப்ராஹிம் துவான் மான் மறுத்துள்ளார்.

Related News

யுபிஎஸ்ஆர் மற்றும் பிடி3 தேர்வுகளை மீண்டும் நடத்துவது குறித்து அரசாங்கம் நாளை அறிவிக்கும்

இராணுவ உயர்மட்ட ஊழல் தொடர்பாக மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் கடும் அதிருப்தி: மற்ற துறைகளிலும் ஊழல் பரவியிருக்கூடும் என கவலைத் தெரிவித்தார்

போதைப் பொருள் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார் Namewee

பங்கோரில் ஸ்னோர்கெலிங் நடவடிக்கையில் ஈடுபட்ட தைவான் பெண் மரணம்

ரேக்ஸ் டானின் குடும்பத்தினருக்கு எதிராக மிரட்டல் விடுப்பதை நிறுத்துங்கள் - சைஃபுடின் எச்சரிக்கை


