Jun 30, 2026
Thisaigal NewsYouTube
மே மாதம் வரை கனமழை மற்றும் பலத்த காற்று: வெயிலின் தாக்கத்திலிருந்து மக்களுக்கு நிம்மதி
தற்போதைய செய்திகள்

மே மாதம் வரை கனமழை மற்றும் பலத்த காற்று: வெயிலின் தாக்கத்திலிருந்து மக்களுக்கு நிம்மதி

Share:

நாட்டில் நிலவி வரும் கடும் வெப்பத்திற்குப் பிறகு, வரும் மே மாதம் வரை ஆங்காங்கே கனமழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஆர்தர் ஜோசப் குருப் தெரிவித்துள்ளார்.

தீபகற்ப மலேசியாவின் மேற்கு, வடக்கு மற்றும் உட்புறப் பகுதிகளிலும், சபா மற்றும் சரவாக் மாநிலங்களிலும் மதிய வேளை முதல் மாலை வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

வானிலை ஆய்வு மையத்தின் கண்காணிப்பின்படி, 35 டிகிரி செல்சியஸைத் தாண்டிய வெப்பப்பகுதிகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது. தற்போது 8 பகுதிகள் மட்டுமே 'நிலை 1' எச்சரிக்கையில் உள்ளன.

அணைகளில் நீர் இருப்பை உறுதி செய்ய, தேசிய பேரிடர் மேலாண்மை முகமையான NADMA மற்றும் விமானப்படையின் உதவியுடன் ஏப்ரல் 6 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரை வடக்கு மாநிலங்கள் மற்றும் ஜோ கூரில் செயற்கை மழை பெய்விக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

Related News