Jan 7, 2026
Thisaigal NewsYouTube
முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமது ஐஜேஎன் மருத்துவமனையில் அனுமதி
தற்போதைய செய்திகள்

முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமது ஐஜேஎன் மருத்துவமனையில் அனுமதி

Share:

கோலாலம்பூர், ஜனவரி.06-

முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது, இன்று காலை தனது வீட்டில் வழுக்கி விழுந்ததைத் தொடர்ந்து, தேசிய இருதய நிறுவனமான ஐஜேஎன் மருத்துவமனையில் மருத்துவக் கண்காணிப்பிற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவர் ஆம்புலன்ஸ் மூலமாக ஐஜேஎன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் என்றும், அப்போது மகாதீர் சுயநினைவுடன் தான் இருந்தார் என்றும் அவரது உதவியாளர் சுஃபி யுசோஃப் தெரிவித்துள்ளார்.

பால்கனியிலிருந்து இருந்து வரவேற்பறைக்குச் செல்லும் வழியில் அவர் வழுக்கி விழுந்ததாக ஊடகங்களுக்கான வாட்ஸ்ஆப் குழுவில் சுஃபி யுசோப் தகவல் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஐஜேஎன் மருத்துவமனையில் அவர் முழு பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படவுள்ளார்.

Related News