2026 ஆம் ஆண்டு மாட்டா ஃபேர் பயணக் கண்காட்சிக்கு வருபவர்களுக்கு வெறும் 1 ரிங்கிட்டில் விமான டிக்கெட் வாங்கும் வாய்ப்பை ஆர்எச்பி வங்கி வழங்குகிறது.
மாட்டா கண்காட்சி வரும் செப்டம்பர் 4 முதல் 6 ஆம் தேதி வரை கோலாலம்பூர் MITEC-இல் நடைபெறவிருக்கிறது.
கண்காட்சிக் காலத்தில் ஆர்எச்பி அட்டையைப் பயன்படுத்தி குறைந்தபட்சம் 3,500 ரிங்கிட் செலவிடும் வாடிக்கையாளர்கள், ஆர்எச்பி அரங்கில் நடைபெறும் சிறப்புக் குலுக்கல் போட்டியில் பங்கேற்கலாம் தகுதி பெறுவர்.
தினமும் 100-க்கும் மேற்பட்ட பரிசுகள் வழங்கப்படுகின்றன. இதில் 1 ரிங்கிட் விமான டிக்கெட், Insta360 கேமரா மற்றும் பல பயணப் பரிசுகளும் அடங்கும்.
மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பயண நிறுவனங்களுடன் ஆர்எச்பி மற்றும் ஆர்எச்பி இஸ்லாமிக் அட்டைதாரர்கள் 1,500 ரிங்கிட் வரை சேமிப்பு பெறலாம்.
பயணம் தொடர்பான செலவுகளுக்கு, பங்கேற்கும் வணிகர்கள் மூலம் பூஜ்ஜிய விழுக்காடு வட்டியில் தவணைத் திட்டமும் வழங்கப்படுகிறது.
ஆர்எச்பியின் புதிய பல நாணய டெபிட் அட்டை மூலம், ஒரே அட்டையில் 34 வகையான நாணயங்களில் பணத்தைச் சேமித்தும் செலவிட்டும் பயன்படுத்தலாம்.








