Aug 26, 2026
Thisaigal NewsYouTube
ஆர்சிஐ அறிக்கையை அரசியலாக்க வேண்டாம்; அக்மாலுக்கு கெஅடிலான் இளைஞர் அணி பதிலடி
தற்போதைய செய்திகள்

ஆர்சிஐ அறிக்கையை அரசியலாக்க வேண்டாம்; அக்மாலுக்கு கெஅடிலான் இளைஞர் அணி பதிலடி

Share:

தாபோங் ஹாஜி அரச விசாரணை ஆணையமான ஆர்சிஐ அறிக்கையைத் தங்களுக்குப் சாதகமான அரசியல் கதையை உருவாக்குவதற்காகப் பயன்படுத்த வேண்டாம் என கெஅடிலான் இளைஞர் அணியின் தகவல் பிரிவுத் தலைவர் டானிஷ் ஹைருடின் அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் டாக்டர் அக்மாலுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

முன்னதாக ஆர்சிஐ அறிக்கையை வெளியிட வலியுறுத்திய அக்மால், அறிக்கை வெளியாகி அமலாக்க அமைப்புகள் நடவடிக்கை எடுத்த பின்னர், அதன் முடிவுகள் தனது அரசியல் எதிர்பார்ப்புக்கு ஏற்ப அமையாததால் தற்போது விவகாரத்தை திசை திருப்ப முயல்வதாக டானிஷ் ஹைருடின் குற்றம் சாட்டினார்.

தாபோங் ஹாஜி ஆர்சிஐ, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஆட்சிக்கு வந்த பிறகு அமைக்கப்படவில்லை என்பதையும் டானிஷ் ஹைருடின் சுட்டிக் காட்டினார்.

அறிக்கையில் குறை இருந்தால், நாடாளுமன்றத்தில் அம்னோ விவாதிக்கலாம் என்றும், புதிய ஆதாரங்கள் இருந்தால் விசாரணைக்காக சமர்ப்பிக்கலாம் என்றும் அவர் கூறினார்.

“கிரியேட்டிவ் அக்கவுண்டிங், நிர்வாகக் குறைபாடுகள், நூறு விழுக்காடு நஷ்டத்தை ஏற்படுத்திய முதலீடுகள் போன்ற முக்கிய விவகாரங்களில் ஏன் அம்னோ மௌனம் காக்கிறது?” என்றும் அம்னோ கேள்வி எழுப்பினார்.

தாபோங் ஹாஜி எந்த அரசியல் கட்சிக்கும் சொந்தமானதல்ல; அது கோடிக்கணக்கான வைப்பாளர்களின் பணமும் நம்பிக்கையும் என அவர் வலியுறுத்தினார்.

Related News