Sep 7, 2026
Thisaigal NewsYouTube
நாளை நீதிமன்றக் கூண்டில் முன்னாள் பிரதமர் இஸ்மாயில் சப்ரி
தற்போதைய செய்திகள்

நாளை நீதிமன்றக் கூண்டில் முன்னாள் பிரதமர் இஸ்மாயில் சப்ரி

Share:

முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் சட்டத்தின் கீழ் நாளை கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட உள்ளார்.

66 வயதான இஸ்மாயில் சப்ரி, தனது சொத்து விவரங்களில் முரண்பாடான தகவல்களை அறிவித்தது தொடர்பாக எஸ்பிஆர்எம் சட்டம் 2009-இன் பிரிவு 36 -ன் கீழ் குற்றச்சாட்டை எதிர்கொள்ளவுள்ளார். அவரது வழக்கறிஞர் டத்தோ அமர் ஹம்சா அர்ஷாட் இதை உறுதிப்படுத்தியுள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 7-ஆம் தேதி குற்றஞ்சாட்டப்படவிருந்த அவர், உடல்நலக் கோளாறு காரணமாக தேசிய இருதயக் கழகத்தில் சிகிச்சை பெற்றதைத் தொடர்ந்து, விசாரணை நாளை ஆகஸ்ட் 27-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

முன்னதாக, இஸ்மாயில் சப்ரி தொடர்பான விசாரணையில், பல்வேறு வெளிநாட்டு நாணயங்களில் சுமார் 170 மில்லியன் ரிங்கிட் ரொக்கப் பணமும், சுமார் 7 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள 16 கிலோ தங்கக் கட்டிகளும் கைப்பற்றப்பட்டன.

Related News

சிரம்பான் குடியிருப்புப் பகுதியில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: போதைப்பொருள் வழக்கில் சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்

சிரம்பான் குடியிருப்புப் பகுதியில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: போதைப்பொருள் வழக்கில் சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்

அதிகரித்து வரும் புகைமூட்டம்: சிலாங்கூரில் பொதுமக்களுக்கு முககவசங்கள் விநியோகிக்க மாநில அரசு முடிவு

அதிகரித்து வரும் புகைமூட்டம்: சிலாங்கூரில் பொதுமக்களுக்கு முககவசங்கள் விநியோகிக்க மாநில அரசு முடிவு

மீட்கப்பட்ட மலாயன் புலி யோங் சோ சிகிச்சைக்குப் பின் மீண்டும் வனப் பகுதிக்குள் விடப்பட்டது

மீட்கப்பட்ட மலாயன் புலி யோங் சோ சிகிச்சைக்குப் பின் மீண்டும் வனப் பகுதிக்குள் விடப்பட்டது

ஜோகூரில் தெருநாய்களால் தாக்கப்பட்ட 2 வயது சிறுமி பலத்த காயம் - போலீஸ் விசாரணை

ஜோகூரில் தெருநாய்களால் தாக்கப்பட்ட 2 வயது சிறுமி பலத்த காயம் - போலீஸ் விசாரணை

சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா - கல்வி அமைச்சர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது

சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா - கல்வி அமைச்சர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது

எரிமலை வெடிப்பு: மலேசியா - ஜகார்த்தா இடையில் 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து

எரிமலை வெடிப்பு: மலேசியா - ஜகார்த்தா இடையில் 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து