Sep 12, 2026
Thisaigal NewsYouTube
சூதாட்டத்திற்கு அனுமதி தந்தால் கெடாவாசிகள் உங்களைச் சபிப்பார்கள் — அன்வாருக்கு சனூசி எச்சரிக்கை
தற்போதைய செய்திகள்

சூதாட்டத்திற்கு அனுமதி தந்தால் கெடாவாசிகள் உங்களைச் சபிப்பார்கள் — அன்வாருக்கு சனூசி எச்சரிக்கை

Share:

கெடாவில் மீண்டும் சூதாட்ட நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டால், பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமைk கெடா மக்கள் கடுமையாகச் சாடுவார்கள் என மந்திரி பெசார் சனூசி முகமட் நூர் எச்சரித்துள்ளார்.

2023-ஆம் ஆண்டு மாநிலத்தில் சூதாட்ட மற்றும் லாட்டரி நிலையங்களுக்கு விதிக்கப்பட்ட முழுமையான தடையை கடந்த ஆகஸ்ட் 12-ஆம் தேதி கூட்டரசு நீதிமன்றம் ரத்து செய்ததை சனூசி சுட்டிக் காட்டினார்.

இதையடுத்து, சூதாட்ட உரிமங்களை அனுமதிப்பதா இல்லையா என்ற முடிவு, நிதி அமைச்சருமான பிரதமர் அன்வாரின் கைகளில் இருப்பதாக சனூசி கூறினார்.

நேற்றிரவு அலோர் ஸ்டாரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய சனூசி, கெடாவில் சூதாட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டால், மக்கள் அன்வாரை கடுமையாக விமர்சிப்பார்கள் என்றும் தெரிவித்தார்.

மேலும், கெடாவில் சூதாட்டத் தடைக்கு எதிராக தொடரப்பட்ட நீதிமன்ற வழக்குக்கு நிதியுதவி வழங்கியதாகக் கூறப்படும் “Tauke ” ஒருவரின் அடையாளம் தனக்குத் தெரியும் என்றும், நீதிமன்ற வழக்கு முடிவடைந்த பிறகு அவரது பெயரை உரிய நேரத்தில் வெளியிடுவேன் என்றும் சனூசி சவால் விடுத்துள்ளார்.

Related News

எல்பிடி விபத்தில் பலி 5 எண்ணிக்கை ஆக உயர்வு – 11 நாட்களுக்குப் பிறகு 18 வயது இளைஞர் உயிரிழப்பு

எல்பிடி விபத்தில் பலி 5 எண்ணிக்கை ஆக உயர்வு – 11 நாட்களுக்குப் பிறகு 18 வயது இளைஞர் உயிரிழப்பு

தியோமான் தீவில் படகு ஏறும் போது தவறி விழுந்து இந்திய சுற்றுலாப் பயணி உயிரிழப்பு

தியோமான் தீவில் படகு ஏறும் போது தவறி விழுந்து இந்திய சுற்றுலாப் பயணி உயிரிழப்பு

வெளிநாட்டில் பிறக்கும் மலேசியத் தாய்மார்களின் பிள்ளைகளுக்கு தானியங்கி குடியுரிமை – 50,000 விண்ணப்பங்களில் 4,121 மட்டுமே நிலுவையில் உள்ளது

வெளிநாட்டில் பிறக்கும் மலேசியத் தாய்மார்களின் பிள்ளைகளுக்கு தானியங்கி குடியுரிமை – 50,000 விண்ணப்பங்களில் 4,121 மட்டுமே நிலுவையில் உள்ளது

மானியம் வழங்க ஒப்புதல் அளித்துவிட்டு நிராகரிப்பு – மித்ரா மீது இந்து அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு

மானியம் வழங்க ஒப்புதல் அளித்துவிட்டு நிராகரிப்பு – மித்ரா மீது இந்து அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு

போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு?  2 ஆவது விமானியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு? 2 ஆவது விமானியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

30 ஆண்டுகள் சேவையாற்றியும் பயனில்லை - ஆலய உறுப்பினர் பதவி ரத்தால் ரெஜினா அதிருப்தி

30 ஆண்டுகள் சேவையாற்றியும் பயனில்லை - ஆலய உறுப்பினர் பதவி ரத்தால் ரெஜினா அதிருப்தி