Sep 15, 2026
Thisaigal NewsYouTube
புகைமூட்டம் தீவிரமானால் தேசிய தினக் கொண்டாட்டத்தில் மாற்றம்? இன்று மாலை அறிவிப்பு
தற்போதைய செய்திகள்

புகைமூட்டம் தீவிரமானால் தேசிய தினக் கொண்டாட்டத்தில் மாற்றம்? இன்று மாலை அறிவிப்பு

Share:

நாட்டில் நிலவும் புகைமூட்டம் காரணமாக, 2026 தேசிய தினக் கொண்டாட்டத்தின் அளவு அல்லது நடைபெறும் இடத்தில் மாற்றம் செய்யப்படுமா என்பது குறித்து இன்று மாலை அரசாங்கத் தலைமைச் செயலாளர் அறிவிப்பார் என தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்துள்ளார்.

புகைமூட்ட நிலவரம் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு அரசாங்கம் தொடர்ந்து கண்காணித்து வருவதாக அவர் கூறினார்.

வரும் 31-ஆம் தேதி நடைபெறவுள்ள தேசிய தினக் கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள் தொடர்ந்தாலும், புகைமூட்டம் மோசமடைந்தால் கொண்டாட்டத்தின் அளவு அல்லது இடம் தொடர்பில் மாற்றங்கள் செய்யப்படலாம்.

இது குறித்த இறுதி முடிவு இன்று மாலை அறிவிக்கப்படும் என ஃபஹ்மி தெரிவித்துள்ளார்.

Related News