Sep 15, 2026
Thisaigal NewsYouTube
மாராங் சிறையில் கைதி மரணம்; தாக்குதல் சம்பவத்தில் தீவிர விசாரணை
தற்போதைய செய்திகள்

மாராங் சிறையில் கைதி மரணம்; தாக்குதல் சம்பவத்தில் தீவிர விசாரணை

Share:

திரெங்கானு, மாராங் சிறைச்சாலையில் சக கைதிகளால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் கைதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மலேசிய சிறைத்துறை தீவிர விசாரணையை தொடங்கியுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 24-ஆம் தேதி நிகழ்ந்த இந்தச் சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், சிறைத்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்ட கைதிக்கு சிகிச்சை அளித்தனர்.

எனினும், பின்னர் அவர் உயிரிழந்ததாக சிறைத்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சவப் பரிசோதனைக்காக அந்தக் கைதியின் உடல், கோலா திரங்கானுவில் உள்ள சுல்தானா நூர் ஸாஹிரா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

சம்பவத்தின் உண்மையான காரணத்தையும் தொடர்புடையவர்களையும் கண்டறிய போலீசாருடன் முழுமையாக ஒத்துழைத்து விசாரணை நடத்தப்படும் என சிறைத்துறை தெரிவித்துள்ளது.

Related News