பாயான் லெப்பாஸ், ஆகஸ்ட்.01-
பினாங்கு மாநிலத்தில் இன்று நடைமுறைக்கு வரவிருந்த குடிநீர் புதிய கட்டணச் சீரமைப்பு மேலும் ஓராண்டுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
வரும் 2026 ஆம் ஆண்டு ஜுலை மாதம் முதல் தேதி குடிநீர் புதிய கட்டணச் சீரமைப்பு நடைமுறைக்கு வரவிருப்பதாக பினாங்கு முதலமைச்சர் சோவ் கோன் யோவ் தெரிவித்துள்ளார்.
சுமார் ஓராண்டு காலத்திற்கு குடிநீர் கட்டணச் சீரமைப்பு ஒத்தி வைக்கப்படுவது மூலம் பினாங்கு மாநிலத்தில் 7 லட்சத்து 15 ஆயிரத்து 957 பேர் பயன் பெறுவர் என்று முதலமைச்சர் விளக்கினார்.
புதிய கட்டண விகிதம், பினாங்கு குடிநீர் விநியோக வாரியத்திற்கு 2026 ஆம் ஆண்டில் 6 மாத காலத்திற்கு 20 மில்லியன் வருவாயை ஈட்டித் தரும். இந்த வருவாய், பினாங்கு மாநிலத்தின் ஒட்டுமொத்த குடிநீர் விநியோகச் சேவையின் தரத்தை உயர்த்துவதற்குப் பயன்படுத்தப்படும் என்று சோவ் கோன் யோவ் குறிப்பிட்டார்.








