கோலாலம்பூர், அக்டோபர்.06-
குளோபல் சுமுத் ஃப்ளோட்டிலா மனிதாபிமானப் பணியில் பங்கேற்ற 23 மலேசியத் தன்னார்வலர்கள் இன்று திங்கட்கிழமை நாடு திரும்பவுள்ள நிலையில், அவர்களை வரவேற்க மடானி அரசாங்கம் தயாராக உள்ளதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
இதற்காகச் சிறப்புக் கூட்டம் ஒன்றை இன்று இரவு ஏற்பாடு செய்யவிருப்பதாகவும் அவர் தனது முகநூலில் குறிப்பிட்டுள்ளார்.
அதே வேளையில், பாலஸ்தீன மக்களுடனான மலேசியர்களின் ஒற்றுமையை வலுப்படுத்தவும் இந்த நிகழ்வு உதவும் என்றும் அன்வார் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், அவர்களின் வருகையைத் தான் ஆவலுடன் எதிர்பார்ப்பதாகவும், அவர்கள் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள இக்கூட்டம் ஒரு வாய்ப்பாக அமையும் என்றும் அன்வார் தெரிவித்துள்ளார்.








