Aug 2, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

மலேசியாவில் வெள்ளை நுரையீரல் நோய்ப் பாவல் ஆபத்து !

Share:

மூச்சுத் திணறல், நுரையீரல் ஆகியவற்றை உட்படுத்திய சீனாவில் இப்போது பரவும் நிமோனியா பாதிப்பு கிட்டதட்ட உலகின் மற்ற பகுதிகளிலும் இருக்கும் வைட் லங் சின்ரம் எனப்படும் வெள்ளை நுரையீரல் சிண்ட்ரோம் போலவே இருக்கிறது.
இருந்தாலும், சீன நாட்டு சுற்றுப் பயணிகளை அரசாங்கம் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கின்றது என சுற்றுலா, கலை, பண்பாட்டு அமைச்சர் டத்தோ ஶ்ரீ தியோங் கிங் சிங் தெரிவித்தார்.

சீன நாட்டு சுற்றுப் பயணிகள் உட்பட அனைத்து சுற்றுப்பயணிகளின் சுகாதாரத்தைக் கண்காணித்து கட்டுப்பாட்டு நடவடிக்கையில் தமது அமைச்சும் சுகாதார அமைச்சும் இறங்கும் என அவர் மேலும் சொன்னார்.

நாட்டின் அனைத்து நுழைவாயில்களிலும் உடல் வெப்பநிலை ஸ்கேனர்களளையும் இதர தயார் நிலை நடவடிக்கைகளையும் சுகாதார அமைச்சு மேற்கொண்டுள்ளது என தியோங் கிங் சிங் கூறினார்.

முன்னதாக, சீன நாட்டிகுச் செல்லும் மலேசியர்களுக்கும் மலேசியாவுக்கு வரும் சீன நாட்டவருக்கும் 30 நாட்கள் இலவச விசாவை இரு நாடுகளும் அறிவித்துள்ளன.
நாட்டின் சுற்றுலா துறைக்கு நல்ல பலனைக் கொடுக்கும் வல்லமை அந்தத் திட்டத்திற்கு இருந்தாலும், தற்போது சுகாதார பிரச்சனை குறித்த விவகாரம் கவலையை ஏற்படுத்தி உள்ளது. இதற்குக் காரணமாக பெரும்பாலும் 3 முதல் 8 வயது வரையிலான குழந்தைகளைத் தாக்கும் அந்நாட்டில் பரவி வரும் சுவாச நோய் எனக் கூறப்படுகிறது.

மக்களை கவலை கொள்ளும் அளவுக்கு ஊடகங்களும் சமூக வலைத்தளங்களும் தவறானத் தகவலைப் பரப்ப வேண்டாம் என அவர் கேட்டுக் கொண்டார்.

Related News

அரச குடும்பத்திற்கு விசுவாசமாக இருக்க வேண்டும்  - புதிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நெகிரி செம்பிலான் ஆட்சியாளர் அறிவுறுத்தல்

அரச குடும்பத்திற்கு விசுவாசமாக இருக்க வேண்டும் - புதிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நெகிரி செம்பிலான் ஆட்சியாளர் அறிவுறுத்தல்

சுங்கை பூலோவில் 11 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல்: வெளிநாட்டவருக்கு போலீஸ் வலைவீச்சு

சுங்கை பூலோவில் 11 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல்: வெளிநாட்டவருக்கு போலீஸ் வலைவீச்சு

Rocky உயிரிழந்த விவகாரம்: சந்தேக நபர், சாட்சிகளிடம் வாக்குமூலம் பதிவு

Rocky உயிரிழந்த விவகாரம்: சந்தேக நபர், சாட்சிகளிடம் வாக்குமூலம் பதிவு

16 வயது இந்தியப் பெண் சாந்தினி காணாமல் போயுள்ளார்: சுங்கை பூலோ போலீஸ் தகவல்

16 வயது இந்தியப் பெண் சாந்தினி காணாமல் போயுள்ளார்: சுங்கை பூலோ போலீஸ் தகவல்

ஜார்ஜ் டவுனில் பரபரப்பு: பழுது பார்க்கும் பணியின் போது கட்டடக் கூரை இடிந்து விழுந்து விபத்து

ஜார்ஜ் டவுனில் பரபரப்பு: பழுது பார்க்கும் பணியின் போது கட்டடக் கூரை இடிந்து விழுந்து விபத்து

சுங்கை பூலோ அருகே பயங்கரம்: கன்டெய்னர் லாரி விபத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கிய ஓட்டுநர் மீட்பு

சுங்கை பூலோ அருகே பயங்கரம்: கன்டெய்னர் லாரி விபத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கிய ஓட்டுநர் மீட்பு