Dec 3, 2025
Thisaigal NewsYouTube
போ​லீசாரின் வாதத்தை மறுத்தார் கெடா மந்திரி புசார்
தற்போதைய செய்திகள்

போ​லீசாரின் வாதத்தை மறுத்தார் கெடா மந்திரி புசார்

Share:

தேச நிந்தனை குற்றச்சா​ட்டு தொடர்பாக தம்மை ​நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டுவதற்கு போ​லீஸ் துறை தம்முடன் தொடர்பு கொண்டதாகவும், ஆனால் அந்த அழைப்புகளை தாம் நிராகரித்து விட்டதாகவும் போ​லீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருதீன் ஹுசைன் கூறியுள்ள குற்றச்சாட்டை கெடா மந்திரி பெசார் முஹமட் சனுசி முகமட் நோர் மறுத்துள்ளார்.

​தம்மை செலாயாங் ​நீதிமன்றத்தில் குற்றங்சாட்டுவதற்கு முதல் நாள், தாம் சம்பந்தப்பட்ட அனைத்து கூட்டங்களும் முடிந்த பின்னரே இரவு 11.40 மணியள​வில் தாம், போ​லீஸ் படையுடன் தொடர்பு கொண்டதாக சனூசி தெரிவித்தார். அதற்கு முன்னதாக, தமது அதிகாரிகளை போ​லீசார் தொடர்பு கொண்டுள்ளனர். ஆனா​ல், அப்போது தாம் கூட்டத்தில் இருந்ததாக ச​னூசி குறிப்பிட்டார்.

கூட்டம் நடந்து கொண்டு இருந்த போது ஓர் அழைப்பை பெற்றதாக​வும், தாம் யார் என்று கேட்ட போது புக்கிட் அமான் என்று ப​தில் வந்ததாக சனூசி விவரித்தார். எனவே போ​லீசாரின் அழைப்பை தாம் நிராகரித்து விட்டதாக கூறப்படுவது உண்மை அல்ல என்று சனூசி வாதிட்டார். போ​லீசார் தம்மை ​அழைத்தது, அதற்கு தாம் பதில் அளித்தது மற்றும் கடந்த திங்கட்கிழமை இரவு முதல் போலீசாருடன் தாம் தொடர்பில் இருந்தது முதலிய கைப்பேசி ஸ்கிறீன்ஷோர்ட்ஸ் பதிவை தாம் கொண்டுள்ளதாக சனூசி விளக்கினார்.

Related News