டான்ஸ்ரீ முகைதீன் யாசின் தலைமையிலான பெரிக்காத்தான் நேஷனல், சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடவிருக்கும் தனது வேட்பாளர்களின் பெயர்களை இன்று அறிவிக்கவிருக்கிறது. பெர்சத்து, பாஸ் மற்றும் கெராக்கான் ஆகிய உறுப்புக்கட்சிகளை உள்ளடக்கிய பெரிக்காத்தான் நேஷனல், மாநில ரீதியாக இன்றிரவு நடைபெறும் நிகழ்வுகளில் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடுகிறது. பினாங்கில் பாஸ் கட்சி தலைமையகத்திலும், சிலாங்கூரில் பெட்டாலிங் ஜெயா, தாமான் மேடன் னிலும், கெடாவில் அலோர்ஸ்டாரில் உள்ள பாஸ் கட்சி தலைமையகத்திலும் வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிக்கப்படவிருக்கின்றன என்று பெரிக்காத்தான் நேஷனல் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது. நெகிரி செம்பிலான் மாநிலத்தின் வேட்பாளர்களை அறிவிப்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்ற அது குறிப்பிட்டுள்ளது.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது


