Dec 4, 2025
Thisaigal NewsYouTube
இந்திய சமுதாயத்திற்கு 100 மில்லியன் ரிங்கிட் நிதியை தெக்குன் ஏற்படுத்தித் தந்துள்ளது
தற்போதைய செய்திகள்

இந்திய சமுதாயத்திற்கு 100 மில்லியன் ரிங்கிட் நிதியை தெக்குன் ஏற்படுத்தித் தந்துள்ளது

Share:

கோலாலம்பூர், ஜூலை.24-

இந்திய சமுதாயத்தின் பொருளாதார சமூகவியல் மேம்பாட்டுக்குரிய திட்டங்களான SPUMI ( ஸ்பூமி ) மற்றும் SPUMI Goes Big ( ஸ்பூமி கோஸ் பிக் ) ஆகிவற்றிக்கு 2025 ஆம் ஆண்டில் தெக்குன் வாயிலாக 100 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கப்பட்டதாக தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத் துணை அமைச்சரான டத்தோ ஶ்ரீ ஆர். ரமணன் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இந்திய சமுதாயத்தின் பொருளாதார சமூகவியல் மேம்பாட்டுக்குரிய இவ்விரு பிரதான திட்டங்களின் வாயிலாக நாடு தழுவிய நிலையில் இந்திய சமுதாயத்தைச் சேர்ந்த 2,500 தொழில்முனைவர்கள் பயன் பெறுவர் என்று எதிர்பார்க்கப்படுவதாக டத்தோஸ்ரீ ரமணன் குறிப்பிட்டார்.

அதே வேளையில் இந்திய தொழில்முனைவர்களை பொருளாதார ரீதியாக வளப்படுத்துதற்கு மற்றொரு முன்முயற்சியாக PENN ( பெண் ) திட்டத்திற்கு அமானா இக்தியார் மலேசியா மூலமாக 100 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக டத்தோஸ்ரீ ரமணன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் சுங்கை சிப்புட் எம்.பி. எஸ். கேசவனின் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த டத்தோ ஶ்ரீ ரமணன், 2025 ஆம் ஆண்டு ஜனவரிக்கும் ஜுனுக்கும் இடையில் SPUMI மற்றும் SPUMI Goes Big ஆகிய திட்டங்களில் பங்கு கொண்ட 1,064 பேருக்கு தெக்குன் மூலம் மொத்தம் 29.13 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக விவரித்தார்.

இந்த எண்ணிக்கையில் சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியை சேர்ந்த 18 பேருக்கு 2 லட்சத்து 72 ஆயிரம் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக டத்தோ ஶ்ரீ ரமணன் தெளிவுபடுத்தினார்.

இதரத் திட்டங்களில் சுங்கை சிப்புட்டைச் சேர்ந்த 100 தொழில்முனைவர்களுக்கு 8 லட்சத்து 36 ஆயிரத்து 200 ரிங்கிட் வழங்கப்பட்டுள்ளது. இது போன்ற பல்வேறு திட்டங்களின் வாயிலாக இந்திய சமுதாயத்தை மேம்படுத்துவதற்கு மடானி அரசாங்கம் தொடர்ந்து கடப்பாட்டு கொண்டுள்ளது என்பதையே இது நிரூபிக்கிறது என்று டத்தோ ஶ்ரீ ரமணன் குறிப்பிட்டார்.

Related News