May 28, 2026
Thisaigal NewsYouTube
பட்டாணி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் எதிரொலி: கிளந்தான் - தாய்லாந்து எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது
தற்போதைய செய்திகள்

பட்டாணி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் எதிரொலி: கிளந்தான் - தாய்லாந்து எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

Share:

கிளந்தான் - தாய்லாந்து எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு நிலைமை கட்டுக்குள் இருப்பதாக அம்மாநில போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

அப்பகுதிகளில் வாழும் பொதுமக்கள் இது குறித்து அச்சமடைய வேண்டாம் என்றும் போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

கடந்த மே 25-ஆம் தேதி, பட்டாணி பகுதியில், தாய்லாந்து போலீஸ் அதிகாரி ஒருவரைக் குறி வைத்து நடத்தப்பட்ட ஆயுதத் தாக்குதலைத் தொடர்ந்து, இந்த தகவலை மாநில போலீசார் வெளியிட்டுள்ளனர்.

இஸ்லாமிய பெண்களைப் போல் உடையணிந்து, ஆயுதமேந்தி வந்த 4 பேர், பள்ளி ஒன்றின் வெளியே, தாய்லாந்து போலீஸ் அதிகாரியை நோக்கி சுட்டத்தில், அந்த அதிகாரியின் மனைவி உயிரிழந்தார்.

இது குறித்து கிளந்தான் மாநில போலீஸ் தலைவர் முகம்மது யுசோஃப் மாமத் கூறுகையில், நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக அமையக்கூடிய எந்தவொரு சம்பவத்தையும் தடுக்க, எல்லை நுழைவு வாயில்களில், 24 மணி நேர கண்காணிப்பும், ரோந்துப் பணிகளும் வலுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

சட்டவிரோத குடியேற்றம், எல்லை தாண்டிய குற்றச்செயல்கள் மற்றும் பிற பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் தொடர்பாக போலீசார் தொடர்ந்து கூடுதல் எச்சரிக்கையுடன் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related News

RM7-க்காக மனைவியை அடித்த கணவன்! இ-ஹெய்லிங் காரில் நடந்த அதிர்ச்சி மோதல் வீடியோ வைரல்

RM7-க்காக மனைவியை அடித்த கணவன்! இ-ஹெய்லிங் காரில் நடந்த அதிர்ச்சி மோதல் வீடியோ வைரல்

நாட்டை அச்சுறுத்தி வரும் செயற்கை போதைப் பொருட்களின் புழக்கம் / ஜூன் முதல் புதிய பரிசோதனைக் கருவிகள் அறிமுகம்

நாட்டை அச்சுறுத்தி வரும் செயற்கை போதைப் பொருட்களின் புழக்கம் / ஜூன் முதல் புதிய பரிசோதனைக் கருவிகள் அறிமுகம்

உணவு விநியோக ஊழியர் மீது சூப் வீசிய ஃபேமிலி மார்ட் ஊழியர் இடைநீக்கம்

உணவு விநியோக ஊழியர் மீது சூப் வீசிய ஃபேமிலி மார்ட் ஊழியர் இடைநீக்கம்

தஞ்சோங் செப்பாட் பகுதியில் 30 பன்றிப் பண்ணைகளை அகற்றும் பணிகள் தீவிரம் - சிலாங்கூர் அரசாங்கம் தகவல்

தஞ்சோங் செப்பாட் பகுதியில் 30 பன்றிப் பண்ணைகளை அகற்றும் பணிகள் தீவிரம் - சிலாங்கூர் அரசாங்கம் தகவல்

லங்காவியில் குவியும் சுற்றுலாப் பயணிகள் - படகு சவாரிக்கான டிக்கெட் விற்பனை 1 லட்சத்தை எட்டியது

லங்காவியில் குவியும் சுற்றுலாப் பயணிகள் - படகு சவாரிக்கான டிக்கெட் விற்பனை 1 லட்சத்தை எட்டியது

சிங்கப்பூரில் 21 வயது இளம்பெண்ணைக் கொலை செய்ததாக மலேசியர் மீது கொலைக் குற்றச்சாட்டு

சிங்கப்பூரில் 21 வயது இளம்பெண்ணைக் கொலை செய்ததாக மலேசியர் மீது கொலைக் குற்றச்சாட்டு