Sep 26, 2026
Thisaigal NewsYouTube
சிங்கப்பூரில் 21 வயது இளம்பெண்ணைக் கொலை செய்ததாக மலேசியர் மீது கொலைக் குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

சிங்கப்பூரில் 21 வயது இளம்பெண்ணைக் கொலை செய்ததாக மலேசியர் மீது கொலைக் குற்றச்சாட்டு

Share:

சிங்கப்பூரில் 21 வயது இளம்பெண்ணை லிப்டில் வைத்துக் கொலை செய்ததாகக் கூறப்படும் வழக்கில், 22 வயதுடைய மலேசியர் மீது கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

பாயிஸ் உமர் என்ற அந்நபர், கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 8.53 மணி முதல் 9.22 மணி வரை, சோ சூ காங் அவென்யூ 2 பகுதியில் உள்ள பிளாக் 248, லிப்ட் A-வில் சுவா பீ திங் என்ற 21 வயது பெண்ணை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையில் உள்ள விசாரணை நீதிபதி முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தப்பட்ட அவர் மீது அக்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

எனினும், குற்றப்பத்திரிகையில் அப்பெண் எவ்வாறு கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடப்படவில்லை.

இக்குற்றச்சாட்டில் பாயிஸ் உமர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், சிங்கப்பூர் சட்டப்படி அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம்.

Related News