Jun 12, 2026
Thisaigal NewsYouTube
செராஸில் ஆற்றில் மிதந்த ஆடவர் சடலம் மீட்பு
தற்போதைய செய்திகள்

செராஸில் ஆற்றில் மிதந்த ஆடவர் சடலம் மீட்பு

Share:

கோலாலம்பூர், ஜாலான் செராஸ் பகுதியில் உள்ள சுங்கை கிரயோங் ஆற்றில், அடையாளம் தெரியாத ஆடவர் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை சுமார் 5.13 மணியளவில், ஆற்றில் மிதந்த அந்த சடலத்தைக் கண்ட பொதுமக்கள் போலீசாருக்குத் தகவல் தெரிவித்ததாக செராஸ் மாவட்டப் போலீஸ் தலைவர் ரோஸ்டி தாவூத் தெரிவித்துள்ளார்.

மீட்கப்பட்ட சடலத்தில் குற்றச்செயலுக்கான எந்த அடையாளங்களும் இல்லை என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், அச்சடலமானது பிரேதப் பரிசோதனைக்காக கான்சலர் துவாங்கு முஹ்ரிஸ் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் ரோஸ்டி தாவூத் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு தற்போது திடீர் மரணமாக வகைப்படுத்தப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகின்றது.

Related News