Jun 6, 2026
Thisaigal NewsYouTube
உணவு விநியோக ஊழியர் மீது சூப் வீசிய ஃபேமிலி மார்ட் ஊழியர் இடைநீக்கம்
தற்போதைய செய்திகள்

உணவு விநியோக ஊழியர் மீது சூப் வீசிய ஃபேமிலி மார்ட் ஊழியர் இடைநீக்கம்

Share:

உணவு விநியோக ஊழியர் ஒருவர் மீது சூப் வீசியதாக குற்றம் சாட்டப்பட்ட ஃபேமிலிமார்ட் மலேசியா நிறுவன ஊழியர் ஒருவர் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து ஃபேமிலி மார்ட் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தங்களது கடைகளில், யாரிடமும், மரியாதையற்ற, பாதுகாப்பற்ற அல்லது ஒழுங்கீனமான நடத்தையை நிர்வாகம் ஒருபோதும் சகித்துக் கொள்ளாது என்று குறிப்பிட்டுள்ளது.

மேலும், நடந்த சம்பவம் தொடர்பாக உள்விசாரணை நடைபெற்று வருவதால், அந்த ஊழியர் தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்டஃபேமிலி மார்ட் ஊழியருக்கும். உணவு விநியோக ஊழியர் ஒருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாத காணொளியானது, சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வரும் நிலையில், ஃபேமிலி மார்ட் நிர்வாகம் மேற்கண்ட அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அக்காணொளியில் உள்ள தகவலின் படி, இச்சம்பவமானது, கோத்தா டமன்சாராவிலுள்ள தி கோர் வணிக வளாகத்திலுள்ள ஃபேமிலி மார்ட் கடையில் நடந்ததாக நம்பப்படுகின்றது.

Related News

சிகாமட் உட்பட நாட்டிலுள்ள எந்த ஒரு சுகாதார நிலையமும் மூடப்படாது - சுகாதார அமைச்சர் உறுதி

சிகாமட் உட்பட நாட்டிலுள்ள எந்த ஒரு சுகாதார நிலையமும் மூடப்படாது - சுகாதார அமைச்சர் உறுதி

டிவிஇடி 2.0 திட்டத்தை மேலும் வலுப்படுத்த பிடிபிகே நிதியிலிருந்து 50 மில்லியன் ரிங்கிட்  ஒதுக்கீடு – அன்வார் அறிவிப்பு

டிவிஇடி 2.0 திட்டத்தை மேலும் வலுப்படுத்த பிடிபிகே நிதியிலிருந்து 50 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு – அன்வார் அறிவிப்பு

டெலிவரி பணியாளர் மீது சூப் ஊற்றப்பட்ட சம்பவம்: சம்பந்தப்பட்ட பணியாளர் இடைநீக்கம் செய்யப்பட்டார்

டெலிவரி பணியாளர் மீது சூப் ஊற்றப்பட்ட சம்பவம்: சம்பந்தப்பட்ட பணியாளர் இடைநீக்கம் செய்யப்பட்டார்

விடுமுறை நாட்களில் தாய்லாந்தில் குவிந்த 3 லட்சம் மலேசியர்கள் - சுற்றுலாத் துறைக்கு மில்லியன் கணக்கில் வருவாய்

விடுமுறை நாட்களில் தாய்லாந்தில் குவிந்த 3 லட்சம் மலேசியர்கள் - சுற்றுலாத் துறைக்கு மில்லியன் கணக்கில் வருவாய்

திரங்காணு அருகே கோர விபத்து: பெண்ணின் கால் துண்டானது

திரங்காணு அருகே கோர விபத்து: பெண்ணின் கால் துண்டானது

ஜோகூர், நெகிரி செம்பிலான் தேர்தலுக்குப் பிறகே மலாக்கா மாநிலத் தேர்தல் - முதலைமைச்சர் அப் ரவூப் யுசோஹ் திட்டவட்டம்

ஜோகூர், நெகிரி செம்பிலான் தேர்தலுக்குப் பிறகே மலாக்கா மாநிலத் தேர்தல் - முதலைமைச்சர் அப் ரவூப் யுசோஹ் திட்டவட்டம்