Jun 6, 2026
Thisaigal NewsYouTube
நாட்டை அச்சுறுத்தி வரும் செயற்கை போதைப் பொருட்களின் புழக்கம் / ஜூன் முதல் புதிய பரிசோதனைக் கருவிகள் அறிமுகம்
தற்போதைய செய்திகள்

நாட்டை அச்சுறுத்தி வரும் செயற்கை போதைப் பொருட்களின் புழக்கம் / ஜூன் முதல் புதிய பரிசோதனைக் கருவிகள் அறிமுகம்

Share:

நாட்டில் அதிகரித்து வரும் செயற்கை போதைப்பொருள் அச்சுறுத்தலை கட்டுப்படுத்தும் நோக்கில், ஜூன் மாதம் முதல் நாடு முழுவதும் செயற்கை போதைப்பொருளைக் கண்டறியும் புதிய கருவிகள் பயன்படுத்தவுள்ளதாக தேசிய போதைப்பொருள் தடுப்பு முகமையான ஏஏடிகே தெரிவித்துள்ளது.

இந்த புதிய கருவிகளில், வேப் திரவங்களில் கலக்கப்படும், பெண்டானில் மற்றும் செயற்கை கஞ்சா கலவைகள் உள்ளிட்ட போதைப்பொருட்களை பரிசோதிக்கும் வசதிகள் இடம்பெற்றுள்ளன.

இந்த பரிசோதனை கருவிகளானது, நாடு முழுவதும் உள்ள அமலாக்க அலுவலகங்களுக்கும் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும், அக்கருவிகள் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபடும் அதிகாரிகளால் பயன்படுத்தப்படும் என்றும் ஏஏடிகே தலைமை இயக்குநர் டத்தோ ருஸ்லின் ஜூசோ தெரிவித்துள்ளார்.

மேலும், தற்போதைய சோதனை நடவடிக்கைகளில், பெண்டானில் போன்ற செயற்கை போதைப்பொருட்களைக் கண்டறிவதில் அதிகாரிகள் புதிய சவால்களை எதிர்கொண்டு வருவதாக ருஸ்லின் ஜூசோ குறிப்பிட்டுள்ளார்.

கஞ்சா மற்றும் ஹெராயின் போன்ற புழக்கத்தில் உள்ள போதைப் பொருட்களை விட, இந்த செயற்கை போதைப்பொருட்களானது மிகவும் ஆபத்தானவை என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.

முன்னதாக, ருஸ்லின் ஜூசோ வெளியிட்ட தகவலில், மலேசியாவில் செயற்கை போதைப்பொருள் பழக்கம் கவலைக்கிடமான அளவுக்கு அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், நாடு முழுவதும் பதிவாகியுள்ள போதைப் பொருட்களுக்கு அடிமையானவர்களில் 70 விழுக்காட்டினர் செயற்கை போதைப்பொருட்களைப் பயன்படுத்துபவதையும் ருஸ்லின் ஜூசோ சுட்டிக் காட்டியுள்ளார்.

Related News

டிவிஇடி 2.0 திட்டத்தை மேலும் வலுப்படுத்த பிடிபிகே நிதியிலிருந்து 50 மில்லியன் ரிங்கிட்  ஒதுக்கீடு – அன்வார் அறிவிப்பு

டிவிஇடி 2.0 திட்டத்தை மேலும் வலுப்படுத்த பிடிபிகே நிதியிலிருந்து 50 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு – அன்வார் அறிவிப்பு

டெலிவரி பணியாளர் மீது சூப் ஊற்றப்பட்ட சம்பவம்: சம்பந்தப்பட்ட பணியாளர் இடைநீக்கம் செய்யப்பட்டார்

டெலிவரி பணியாளர் மீது சூப் ஊற்றப்பட்ட சம்பவம்: சம்பந்தப்பட்ட பணியாளர் இடைநீக்கம் செய்யப்பட்டார்

விடுமுறை நாட்களில் தாய்லாந்தில் குவிந்த 3 லட்சம் மலேசியர்கள் - சுற்றுலாத் துறைக்கு மில்லியன் கணக்கில் வருவாய்

விடுமுறை நாட்களில் தாய்லாந்தில் குவிந்த 3 லட்சம் மலேசியர்கள் - சுற்றுலாத் துறைக்கு மில்லியன் கணக்கில் வருவாய்

திரங்காணு அருகே கோர விபத்து: பெண்ணின் கால் துண்டானது

திரங்காணு அருகே கோர விபத்து: பெண்ணின் கால் துண்டானது

ஜோகூர், நெகிரி செம்பிலான் தேர்தலுக்குப் பிறகே மலாக்கா மாநிலத் தேர்தல் - முதலைமைச்சர் அப் ரவூப் யுசோஹ் திட்டவட்டம்

ஜோகூர், நெகிரி செம்பிலான் தேர்தலுக்குப் பிறகே மலாக்கா மாநிலத் தேர்தல் - முதலைமைச்சர் அப் ரவூப் யுசோஹ் திட்டவட்டம்

மஞ்சோங்கில் நடந்த ஆயுதக் கொள்ளை - மூன்று வெளிநாட்டினருக்கு போலீஸ் வலைவீச்சு

மஞ்சோங்கில் நடந்த ஆயுதக் கொள்ளை - மூன்று வெளிநாட்டினருக்கு போலீஸ் வலைவீச்சு