Jun 12, 2026
Thisaigal NewsYouTube
RM7-க்காக மனைவியை அடித்த கணவன்! இ-ஹெய்லிங் காரில் நடந்த அதிர்ச்சி மோதல் வீடியோ வைரல்
தற்போதைய செய்திகள்

RM7-க்காக மனைவியை அடித்த கணவன்! இ-ஹெய்லிங் காரில் நடந்த அதிர்ச்சி மோதல் வீடியோ வைரல்

Share:

RM7 கட்டணத்திற்கான சில்லறைப் பிரச்சினையில் ஏற்பட்ட வாக்குவாதம், பயணி ஒருவர் தனது மனைவியைத் தாக்கும் அளவிற்குக் கடுமையான மோதலாக மாறியுள்ளது.

ராக்யாட் இ-ஹெய்லிங் மை என்ற முகநூல் பக்கத்தில் பதிவேற்றப்பட்ட இந்த நான்கு நிமிடக் காணொளியில், பயணி ஒருவர் RM7 கட்டணத்திற்கு RM50 நோட்டைக் கொடுத்தபோது இந்த மோதல் தொடங்கியுள்ளதாக தெரிய வந்துள்ளது.

மீதித் தொகை RM43-ஐத் திருப்பித் தர ஓட்டுநரிடம் சில்லறை இல்லாததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, அந்தப் பயணி கட்டணத்தைச் செலுத்த மறுத்துள்ளார். தான் புகார் அளிக்கப் போவதாக ஓட்டுநர் கூறியதால் ஆத்திரமடைந்த பயணி சத்தமிட்டதுடன், தன்னை அமைதிப்படுத்த முயன்ற தனது மனைவியையும் தாக்கியுள்ளார். இதனால் ஓட்டுநர் அவர்கள் இருவரையும் வாகனத்திலிருந்து இறக்கிவிட்டதுடன், கிராப் நிறுவனத்திடம் இதுகுறித்து அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்துள்ளார்.

Related News