கோல திரங்கானு, நவம்பர்.24-
சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் கலங்கிய நதி நீரும், கடல் நீரும் மோதும் நிகழ்வு, பெரிய வெள்ளப் பேரிடருக்கான அச்சுறுத்தலின் அறிகுறிகள் அல்ல என்றும், அவை பருவ மழைகாலத்தில் இயல்பாக ஏற்படும் ஓர் இயற்கை நிலை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட நதி மற்றும் கடல் நீரின் நிறத்தில் ஏற்பட்டுள்ள வேறுபாடுகள் குறித்த புகைப்படங்கள் பற்றி விளக்கம் அளிக்கையில் திரெங்கானு மாநில வடிக்கால், நீர்ப்பாசன இலாகாவின் இயக்குநர் ஒஸ்மான் அப்துல்லா இதனைத் தெரிவித்தார்.
Sungai Telemong, Sungai Berang, Sungai Tersat, Sungai Nerus மற்றும் Sungai Tok Jiring உப்பட திரெங்கானு ஆற்றுப் படுகை மற்றும் நீர் நிலைகள் வாயிலாக வண்டல் மண்ணை அடித்துச் செல்லும் நன்னீர் ஓட்டங்கள், கடலில் கலக்கும் போது நீரின் நிறத்தில் இத்தகைய மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்று ஒஸ்மான் அப்துல்லா தெளிவுபடுத்தினார்.








