அம்னோ தலைவர் டத்தோ ஶ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி அக்கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகாதவரையில் அக்கட்சியில் நிலவிவரும் உட்பூசலுக்கும், பிளவுகளுக்கும் இப்போதைக்கு தீர்வு காணமுடியாது என்று சிந்தனை குழாம் அமைப்பு ஒன்று கூறுகிறது.
பாரிசான் நேஷனலின் தலைவருமான ஜாஹிட் ஓர் உறுதியான முடிவை எடுக்கும்வரையில் அம்னோ உறுப்பினர்கள் ஒதுங்கியிருப்பதும், தேர்தலில் வாக்களிக்காமல் இருப்பதும் ஒரு தொடர்க்கதையாக இருந்துவரும் என்று இல்ஹாம் மையம் ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
அதே வேளையில் ஜாஹிட்டின் விலகல் மூலம் அம்னோவில் பெரும் மாற்றம் ஏற்பட்டுவிடாது, மாறாக, அந்த மலாய்க்காரர்களின் கட்சியில் மிகப்பெரிய மாற்றத்தை அல்லது சீரமைப்பை உருவாக்கினால் மட்டுமே அக்கட்சி பழைய செல்வாக்கை பெறமுடியும் என்று அந்த மையத்தின் ஆய்வாளர் முஜிபு அப்துல் முயிஸ் கூறுகிறார்.

Related News

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி


