May 22, 2026
Thisaigal NewsYouTube
7 நாள் போராட்டத்திற்கு பின்னர் மாது மரணம்
தற்போதைய செய்திகள்

7 நாள் போராட்டத்திற்கு பின்னர் மாது மரணம்

Share:

வேலை செய்யும் இடத்தில் சக பெண் தொழிலாளரால் கடுமையாக தாக்கப்பட்டு, கடும் காயங்களுடன் மருத்துவமனையில் கடந்த 7 நாட்களாக தீவிர சிகிச்சை பெற்று வந்த 43 வயது தோட்டப் பெண் தொழிலாளர் ஒருவர், சுயநினைவு திரும்பாமலேயே உயிரிழந்தார்.

சபா, கோத்தா கினாபாலு, குவின் எலிசபெர்த் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அந்த பெண் தொழிலாளர் நேற்று உயிரிழந்ததாக பெலுரான் மாவட்ட போலீஸ் தலைவர் ஹசன் மஜித் தெரிவித்தார்.

உயிரிழந்த அந்தப் பெண்மணிக்கும், சகப் பணியாளரான 25 பெண்ணுக்கும் முன்விரோதம் காரணமாக கைகலப்பில் ஈடுபட்டுள்ளனர். இதில் ரப்பர் மர கட்டையால் தாக்கப்பட்ட அந்த மாது கடும் காயங்களுக்கு ஆளாகியுள்ளார் என்று ஹசன் மஜித் குறிப்பிட்டுள்ளார்.

Related News