Jul 31, 2026
Thisaigal NewsYouTube
அந்த விரைவு பேருந்து ஓட்டுநரை போலீஸ் தேடி வருகிறது
தற்போதைய செய்திகள்

அந்த விரைவு பேருந்து ஓட்டுநரை போலீஸ் தேடி வருகிறது

Share:

சுக்கை , ஆகஸ்ட் 24-

கோலத்திரெஙகானுவிலிருந்து கோலாலம்பூரை நோக்கி விரைவு பேருந்து பயணத்தின் போது 23 வயது பெண் பயணியை மானபங்கம் செய்ததாக கூறப்படும் அந்தப் பேருந்தின் ஓட்டுநரை போலீசார் தேடி வருகின்றனர்.

நேற்றிரவு நடந்த இச்சம்பவம் தொடர்பில் அந்த ஓட்டுநர் அடையாளம் காணப்பட்டு தற்போது தேடப்பட்டு வருவதாக கெமாமன் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்பரின்டென்டான் ஹன்யான் ரமலான் தெரிவித்தார்.

இரட்டை அடுக்குகளை கொண்ட அந்த சொகுசு விரைவு பேருந்தில் மேல் அடுக்கில் அமர்ந்திருந்த அந்தப் பெண்ணிடம் இரண்டாவது ஓட்டுநர், ஆபாசப் சேட்டைப் புரிந்ததாக அந்தப் பெண்ணிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அந்தப் பெண் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த போது, அந்த பெண்ணின் கையைப் பிடித்து, அந்த நபர் கைங்கரியத்தைப் புரிந்துள்ளதாக பாதிக்கப்பட்ட பெண் தனது போலீஸ் புகாரில் குறிப்பிட்டுள்ளார் என்று சுப்பரின்டென்டான் ஹன்யான் ரமலான் கூறினார்.

Related News