கோலாலம்பூர், அக்டோபர்.25-
மழைக்காலம் தொடங்கியுள்ள வேளையில் இவ்வாண்டு இறுதியில் பல்வேறு மாநிலங்களில் வெள்ளம் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாக துணைப்பிரதமர் டத்தோ ஶ்ரீ அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.
அதே வேளையில் ஆண்டு இறுதியில் ஏற்படக்கூடிய வெள்ளம், கடந்த ஆண்டைப் போல மிக மோசமான அளவில் இருக்காது என்று வானிலை ஆய்வுத்துறையான மெட் மலேசியா ஆருடம் கூறினாலும், மக்கள் மிகுந்த எச்சரிக்கையாக இருக்கும்படி துணைப்பிரதமர் கேட்டுக் கொண்டுள்ளார்.








