ஆபத்தான ஆயதத்தைப் பயன்படுத்தி உடம்புப் பிடி தொழிலாளி ஒருவருக்கு கடுமையான காயம் விளைவித்ததாக 37 வயதான வேலையில்லா ஆடவர் மீது கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றம்சாட்டப்பட்டது.
என்றாலும், குற்றத்தை மறுத்த அவர், விசாரணை கோரினார்.
ஆடம் முஹம்மது என்ற 37 வயதான அந்த ஆடவர், கடந்த மார்ச் 10-ஆம் தேதி, இரவு 8.15 மணியளவில் டாங் வாங்கி பகுதியில் உள்ள வளாகம் ஒன்றில், 30 வயதான Sani என்பவரை ஸ்பானர் கொண்டு தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இவ்வழக்கானது குற்றவியல் சட்டம், பிரிவு 326-இன் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சமாக 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை, அபராதம் அல்லது பிரம்படி விதிக்கப்படலாம்.








