Sep 26, 2026
Thisaigal NewsYouTube
மலேசியாவில் வெப்ப அலையினால் 56 பேர் பாதிப்பு; இருவர் பலி
தற்போதைய செய்திகள்

மலேசியாவில் வெப்ப அலையினால் 56 பேர் பாதிப்பு; இருவர் பலி

Share:

புத்ராஜெயா, மே.03-

மலேசியாவில் கடந்த ஜனவரி 1-ஆம் தேதி முதல் இதுவரையிலான காலகட்டத்தில், கடும் வெப்பம் காரணமாக 56 உடல்நலப் பாதிப்புகள் பதிவாகியுள்ளதோடு, ஒரு சிறுவன் உட்பட இருவர் மாரடைப்பாலும் வெப்பத் தாக்கத்தினாலும் உயிரிழந்துள்ளதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. பதிவான பாதிப்புகளில் 58 விழுக்காட்டிற்கும் அதிகமானவை மாரத்தான், விளையாட்டுப் பயிற்சிகள், பாதுகாப்புப் படையினரின் கடுமையான உடற்பயிற்சிகளின் போது ஏற்பட்டுள்ளதாகத் தரவுகள் காட்டுகின்றன.

பொதுமக்கள் தங்களை வெப்பத்திலிருந்து தற்காத்துக் கொள்ள அதிகளவில் நீர் அருந்துமாறும், மெல்லிய ஆடைகளை அணியுமாறும் அறிவுறுத்தியுள்ள அமைச்சு, தலைச்சுற்றல் அல்லது அதீத சோர்வு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ உதவியை நாடுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

Related News