Sep 26, 2026
Thisaigal NewsYouTube
3R விவகாரங்களைத் தூண்ட வேண்டாம்: பொதுமக்களுக்கு மலேசியத் தொடர்பு, பல்லூடக ஆணையம் கடும் எச்சரிக்கை
தற்போதைய செய்திகள்

3R விவகாரங்களைத் தூண்ட வேண்டாம்: பொதுமக்களுக்கு மலேசியத் தொடர்பு, பல்லூடக ஆணையம் கடும் எச்சரிக்கை

Share:

கோலாலம்பூர், மே.03-

இனம், சமயம், அரச நிறுவனங்கள் தொடர்பான உணர்ச்சிகரமான அல்லது அவதூறான கருத்துகளை இணையதளங்களில் உருவாக்கவோ அல்லது பகிரவோ வேண்டாம் என மலேசியத் தொடர்பு, பல்லூடக ஆணையம் பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. சமூக நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் வகையில் செயல்படுவோருக்கு எதிராகக் காவல்துறையுடன் இணைந்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தவறு செய்பவர்களுக்கு 1998-ஆம் ஆண்டு தொடர்பு, பல்லூடகச் சட்டத்தின் கீழ் அதிகபட்சமாக 500 ஆயிரம் ரிங்கிட் அபராதம் அல்லது இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

தகவல்களின் உண்மைத்தன்மையை உறுதிச் செய்த பின்னரே அவற்றைப் பகிர வேண்டும் என அறிவுறுத்தியுள்ள ஆணையம், சட்டத்திற்குப் புறம்பான பதிவுகளைத் தடுக்கத் தவறும் இணையத் தளச் சேவை நிறுவனங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

Related News