Jun 27, 2026
Thisaigal NewsYouTube
பாரம்பரியக் கலாச்சாரமே மலாக்காவின் பலம்; தெருவோர டிஸ்கோக்கள் தேவையில்லை: டாக்டர் அக்மல் சாலே காட்டம்
தற்போதைய செய்திகள்

பாரம்பரியக் கலாச்சாரமே மலாக்காவின் பலம்; தெருவோர டிஸ்கோக்கள் தேவையில்லை: டாக்டர் அக்மல் சாலே காட்டம்

Share:

ஷா ஆலாம், மே.03-

மலாக்கா மாநிலம் கடந்த ஆண்டு சுமார் 15 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து பில்லியன் கணக்கிலான வருவாயை ஈட்டியுள்ள நிலையில், வெளிநாட்டுப் பயணிகளைக் கவர தெருவோர டிஸ்கோக்கள் போன்ற கலாச்சாரத்திற்குப் புறம்பான கேளிக்கைகள் தேவையில்லை என்பதை மெய்ப்பித்துள்ளதாக அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் டத்தோ டாக்டர் முஹமட் அக்மால் சாலே தெரிவித்துள்ளார். நீர் திருவிழா போன்ற நிகழ்ச்சிகளில் பாரம்பரிய உடைகள், பாடல்கள், கலை நிகழ்ச்சிகளைப் புகுத்தி மலேசியாவின் தனித்துவமான அடையாளத்தை உலகிற்கு அறிமுகப்படுத்துவதே உண்மையான சுற்றுலா மேம்பாடு என்று அவர் வலியுறுத்தினார்.

மலேசிய கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் வகையில் சுற்றுலாத் திட்டங்களை அமைக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்ட அவர், மலாக்கா மாநிலத்தின் இந்த வெற்றிகரமான அணுகுமுறையை நேரில் வந்து பார்க்குமாறு செபூத்தே நாடாளுமன்ற உறுப்பினர் திரேசா கோக்கிற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

Related News

போலீஸ் காரின் மீது செங்கல் வீசிய வீடற்ற வெளிநாட்டு நபர் கைது

போலீஸ் காரின் மீது செங்கல் வீசிய வீடற்ற வெளிநாட்டு நபர் கைது

வதந்திகளைத் தவிர்த்து உண்மை, தரவுகளுடன் பிரச்சாரம் செய்க: அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் கறார் அறிவுறுத்தல்

வதந்திகளைத் தவிர்த்து உண்மை, தரவுகளுடன் பிரச்சாரம் செய்க: அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் கறார் அறிவுறுத்தல்

கோத்தா பாருவில் 2.01 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சிகரெட் கடத்தல் முறியடிப்பு

கோத்தா பாருவில் 2.01 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சிகரெட் கடத்தல் முறியடிப்பு

ஜோஹர் மாநிலத் தேர்தல்: 56 தொகுதிகளில் 172 வேட்பாளர்கள் போட்டி- தேர்தல் ஆணையம் அறிவிப்பு

ஜோஹர் மாநிலத் தேர்தல்: 56 தொகுதிகளில் 172 வேட்பாளர்கள் போட்டி- தேர்தல் ஆணையம் அறிவிப்பு

தலைவர்கள் புடைசூழ, பெற்றோர் ஆசியுடன் ஸ்கூடாய் தொகுதியில் களம் இறங்கினார் கார்த்தியாயினி ஜெயபாலன்

தலைவர்கள் புடைசூழ, பெற்றோர் ஆசியுடன் ஸ்கூடாய் தொகுதியில் களம் இறங்கினார் கார்த்தியாயினி ஜெயபாலன்

எண்டாவ் தொகுதியில் பெர்சத்து கட்சி போட்டியிடாததற்கான காரணம்; முஹ்யித்தீன் யாசின் விளக்கம்

எண்டாவ் தொகுதியில் பெர்சத்து கட்சி போட்டியிடாததற்கான காரணம்; முஹ்யித்தீன் யாசின் விளக்கம்